தீபாவளி கவிதை: அடுத்த தீபாவளியாவது..!
அடுத்த தீபாவளியாவது..
பெட்ரோல், சிலிண்டர்
விலைவாசி விண்ணை முட்டும் ஏழை, நடுத்தர வர்க்கத்துக்குஅதனாலேசங்கு சக்கரமாய்தலை சுற்றிஇருட்டு கட்டும்!
அரிசி விலை, மளிகை விலை ராக்கெட் வெடியாய் உயரப் பறக்கும்..அதனாலே ஏழைக்கெல்லாம்தீபாவளியன்றும் துயரக் கிறக்கம்!
நகைக் கடை, துணிக்கடைகள்பங்களாவாசி முற்றுகையால் திணறி நசுங்கிப் போகும்...ஏழைக்கு கறிச் சோறு கனவும்காசில்லாத்தால்பாம்பு வெடியாய்ப்பொசுங்கிப் போகும்!
பண்டிகை என்றாலேரொக்கம் உள்ளோர்க்கும் மகிழ்ச்சி வாசலும் திறக்கும்..ஆனால், ஏழைமேணியின் புதுத்துணி ஆசையும்நொடிப் பொழுதே வாழும்ஈசலாய் இறக்கும்!
ஏழைக்குத் தீபாவளிபொருளாதார இயலாமையாம்புஸ்வானமாய் பிசுபிசுக்கும்எப்போதும் இப்படியாய்-வாழ்வுஇனிப்பின்றியே கசக்கும்!
நூலிழை மீது ஓடும்ஏழை வாழ்வுரயில் வெடிதான்..தீபாவளி கொண்டாடத்திராணியில்லை..தினம் தினம் வலிக்கிறதேளின் கடிதான்!
உரக்கச் சத்தமிடப்பயப்படும்ஓலை வெடிதான்ஏழை வாழ்வு..
தன் பலம் அறியாதுபயந்து கிடப்பதால் பஞ்சமே நிலைத்துப்போன பாழ்பட்டக் குடிதான்!
தலையில் தட்டினாலும்வெடிக்காமல் நமத்துப்போன பொட்டுப் பட்டாசாம்ஏழையரின் குட்டக் குனிகிற சுபாவத்தால்அடிமையாக்கினார்மிட்டா மிராசுதான்!
நெருப்புப் பொறி உதிர்க்கும்கம்பி மத்தாப்புதான்?- நெல்அறுப்பு பொய்த்ததாலேஉதிரும் உழவன்உயிர் பூ தான்!
தடுத்த பயத்தால் புஸ்வான வாழ்வு மீண்டு புத்தெழுச்சி பெறுவோமே- ஏழை அடுத்தடுத்த தீபாவளியேனும்சரவெடிச் சந்தோஷம் காணசபதம் ஏற்போமே!
-அல்லிநகரம் தாமோதரன்