சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்: நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1982ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 3ம் தேதி மாற்றுத்திறனாளிகளை போற்றும்விதமாக இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

கால், கைகளை இழந்தாலும் தன்னம்பிக்ககையை இழக்காமல் விடா முயற்சியுடன் ஒவ்வொரு நாளும் வெற்றியுடன் கடந்து வரும் போராளிகளை ஊக்குவிக்கும் விதமாகவும் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது.இத்தினத்தை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சி தலைவர்களும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை சுமார் 200க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அட்சயா மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கம், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கம், திராவிட மாற்றுத் திறனாளிகள் சங்கம், திமுக பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள் சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் வந்திருந்தனர்.

இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின் பாய், வேட்டி, சேலை, பால்பவுடர், கருணாநிதி பம் பொறித்த 2019ம் ஆண்டு கேலண்டர், மளிகை பொருட்கள், தையல் இயந்திரம், மூன்று சக்கர சைக்கிள்ல கண் கண்ணாடி, ஹாட்பேக், பார்வை திறன் அற்றவர்கள் பயன்படுத்தும் குச்சி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

More News >>