ருசியான கறி தோசை ரெசிபி

எத்தனையோ வகை தோசை சாப்பிட்டு இருப்பிங்க.. கறி தோசை சாப்பிட்டு இருக்கீங்களா ? சண்டே ஸ்பெஷலா கறி தோசை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - தேவைக்கேற்ப.மட்டன் கலவை கொத்துக்கறி - 250 கிராம். நல்லெண்ணெய் - தேவையான அளவு.தக்காளி - 100 கிராம்.இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்.மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்.மிளகுத்தூள் - அரை ஸ்பூன்.பச்சை மிளகாய் - 1.தேங்காய் துருவியது - ஒரு கப்.முட்டை - 1.கொத்தமல்லித்தழை - 2 கொத்து.மிளகு, சோம்பு, சீரகம் - 1 தேக்கரண்டி.உப்பு - சிறிதளவு.

செய்முறை:

முதலில், எண்ணெய்யில் பச்சை வாசம் போக வதக்கிய தக்காளியுடன் சிறிது உப்பு சேர்க்கவும்.

அத்துடன், வேகவைத்த கொத்துக்கறியை சேர்த்து அரைத்த இஞ்சி, தேங்காய் விழுதை சிறிது நீர் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

பிறகு மிளகாய்த்தூள், மிளகுத்தூள் கலந்து மேலும் எண்ணெயிட்டு வதக்கி சுக்கா வருவல் தயார் செய்து கொள்ளவும்.

தோசைக்கல்லில் ஊத்தப்பம் அளவுக்கு மாவை ஊற்றி, அதன் மீது நாட்டுக்கோழி முட்டையை ஊற்றி அதற்கும் மேலாக சுக்கா வறுவலை பரப்பி, நல்லெண்ணெய்யுடன் சிறிதளவு மிளகுப் பொடியைத் தூவி வேக வைக்கவும். நன்கு வெந்ததும் கொத்தமல்லித் தழையை தூவவும்.

அவ்ளோதாங்க சுவையான கறி தோசை ரெடி !

More News >>