Sunday, Sep 24, 2023
Dibee Pictures

நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!

by Ari May 5, 2021, 10:55 AM IST

பாலிவுட் பிரபல முன்னணி நடிகை தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.தந்தை பிரகாஷ் படுகோனே மருத்துவமனையில் ...

பாலிவுட்டின் முடிசூடா ராணியான ஸ்ரீதேவியையே கவர்ந்த அழகி தீபிகா படுகோன் தனது அழகாலும், அசத்தலான நடிப்பாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர். 6 ஆண்டுகளாக காதலித்து வந்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே ஜோடி, கடந்த 208ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடர்ந்து வரும் தீபிகா படுகோனே பாலிவுட்டில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.

கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு விதிமுறை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தீபிகா படுகோன் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவளித்து வருகிறார்.

தீபிகா படுகோன் கடந்த ஒரு மாத காலமாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தனது பெற்றோர் வீட்டில் இருந்து வருகிறார். இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு தீபிகாவின் தந்தை பிரகாஷ், தாய் உஜ்ஜால, இளைய சகோதரி அனிஷா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து தீபிகா படுகோனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதையடுத்து தீபிகா படுகோன் வீட்டிலேயே தனிமையில் ஓய்வு எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை தீபிகாவோ, அவரது கணவர் ரன்வீர் சிங்கோ தங்களது சமூகவலைத்தளப்பக்கத்தில் உறுதிப்படுத்தவில்லை.

தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள என்ற செய்தியால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

You'r reading நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்! Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News

Cricket Score