விஸ்வாசம் படத்தின் மாஸ் ஓப்பனிங் லிரிக்ஸ் என்ன தெரியுமா?

விஸ்வாசம் படத்தின் மாஸ் ஓப்பனிங் லிரிக்ஸ் என்ன தெரியுமா?

by Mari S, Sep 25, 2018, 20:35 PM IST

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் ஓப்பனிங் பாடல் குறித்த சர்ப்ரைஸ் தகவல் வெளியாகியுள்ளது.

வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித் இணைந்துள்ள விஸ்வாசம் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

இதுவரை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், விஸ்வாசம் படத்தின் மாஸ் ஓப்பனிங் பாடலின் முதல் வரியை பாடலாசிரியர் அருண் பாரதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ‘தல’ ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

”எத்தன உயரம் இமயமல – அதில் இன்னொரு சிகரம் எங்கதல” என்ற போற்றி வகை பாடலின் வரிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ட்விட்டரில், ஹேஷ்டேக் அமைத்து டிரெண்ட்டாக்கும் முயற்சியில் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்க்கார் படத்தின் சிம்ட்டாங்காரன் பாடல் நேற்று வெளியாகி, கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், யூடியூப், ட்விட்டர் என அனைத்து தளங்களிலும் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.

இதனால், அஜித் ரசிகர்களுக்கு ஒரு ஆறுதல் மகிழ்ச்சியை தர நினைத்த தயாரிப்பு தரப்பு ஓப்பனிங் பாடலின் முதல் வரியை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

You'r reading விஸ்வாசம் படத்தின் மாஸ் ஓப்பனிங் லிரிக்ஸ் என்ன தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை