Thursday, Jan 20, 2022

ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??

by Mahadevan CM Jan 4, 2021, 13:00 PM IST

எவிக்‌ஷன் தினம். இன்னிக்கும் காதி கோட் போட்டுட்டு வந்தார் ஆண்டவர். இன்னும் ரெண்டு வாரம் தான் இருக்கு, அந்த அழுத்தத்தை வீட்டுக்குள்ள இருக்கறவங்க தாங்குவாங்களானு பார்ப்போம்னு சொல்லிட்டே அகம் டிவி வழியே அகத்திற்குள்.

இன்னிக்கு கமல் சார் ரொம்பவும் இறுக்கமா இருந்தார்னு தான் சொல்லனும். வழக்கமான கமெண்ட்ஸ் இல்லை.

ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தங்களுக்காக பிரச்சாரம் செய்யனும். கன்பெஷன் ரூம்தான் அந்த பிரச்சார மேடை. தங்களுக்கு ஏன் ஓட்டு போடங்கறதுக்கான காரணத்தை சொல்லனும்.

பாலா தான் முதல் ஆளு. அவனோட சின்ன வயசு வாழ்க்கையை பத்தி சொன்னது அவனோட தவறுகளுக்கு நியாயம் சொன்னா மாதிரி இருந்தது. குரல் ரொம்ப கம்மி போய் அவன் பேசினதே ஒருவிதமான குழப்பத்துல இருக்கறா மாதிரி தான் இருந்தது.

வரிசையா எல்லாரும் வந்தாங்க. சுவாரஸ்யமான காரணம் யாரும் சொல்லலை. ரியோ சொன்னது நல்லாருந்தது. இதுவரைக்கும் நீங்க பார்த்துருப்பீங்க. நீங்க ஜெயிக்கனும்னா ஒட்டு போடுங்கனு சிம்பிளா முடிச்சுட்டாரு. மற்றவங்களுக்கு இந்த மேடைல என்ன செய்யனும்னு தெளிவில்லாத போது ஆரி தான் உண்மையான பிரச்சாரம் செஞ்சாரு. நேர்மை, ஒருவேளை உணவு, உணவை வீணாக்குதல், ரூல்ஸ் பாலோ செய்யறது, இதெல்லாவற்றையும் கலந்து கட்டி, உண்மையிலேயே ஒரு வேட்பாளர் போட்டோ செஷன்ல இருக்கறா மாதிரி விறைப்பா பேசினாரு. அவரோட கேப்டன்சில தான் உணவு வீணானது. அடுத்து அவரே உணவை வீணாக்கினதையும் நாம பார்த்தோம். இதெல்லாம் தெரிஞ்சும் உணவு வீணாகறதை பேசின ஆரிக்கு, உண்மையான அரசியல்வாதியாக மாற எல்லாத் தகுதியும் வந்துருச்சு.

காலர் ஆப் தி வீக்ல இந்த வார கால் ரம்யாவுக்கு. பின்னாடி பேசாம ஆரி மாதிரி முகத்துக்கு நேரா எப்ப சொல்லப் போறிங்க ரம்யா கிட்ட கேள்வி அவங்க அறிவுக்கண்ணை திறக்குமானு வெயிட் பண்ணி பார்ப்போம்.

அடுத்ததா மீண்டும் ஒரு டாஸ்க். பேசறதுக்கு ஒன்னுமே இல்லைனா மட்டும் தான் இந்த டாஸ்க்லாம் வரும்.

ஒவ்வொருத்தருக்கும் ஒரு கார்ட் கொடுத்தாங்க. அதுல இருக்கற ஒருத்தரை பத்தி, அவரோட ஸ்ட்ராட்டஜியை பத்தி சொல்லனும்.

ரியோவுக்கு சோம்
சோம்க்கு ஆஜித்
ஆரிக்கு ரம்யா
கேப்பிக்கு பாலா
ஆஜித்துக்கு ஷிவானி
ஷிவானிக்கு கேப்பி
ரம்யாவுக்கு ரியோ
பாலாவுக்கு ஆரி.

இப்படி வில்லங்கமா கோர்த்து விட்டுருந்தாங்க. சோம் பத்தி பாசிட்டிவா சொன்னாரு ரியோ.

ஆஜித் கிட்ட ஸ்ட்ராட்சஜினு எதுவும் இல்லேனு சொல்லிட்டாரு சோம்.

ரம்யாவோட ஸ்ட்ராட்டஜியை பத்தி பேசும் போது கிபி 6வது வாரத்துல நடந்த ஒரு விஷயத்தை எடுத்து, அதை ஞாபகபடுத்தி பேசினாரு ஆரி. இதுக்கும் நான் கேட்டதுக்கும் என்ன சம்பந்தம்னு கமலே கேக்கற அளவுக்கு இருந்தது.

தன் கூட இருக்கறவங்களை சரியா பார்த்துக்குவான் பாலானு சொல்லி, குரூப்பிசம் செய்யறது தான் பாலாவோட ஸ்ட்ராட்டஜினு இன் டைரக்டா சொன்னாங்க கேப்பி

கேப்பி தேவையான இடத்துல பேசறது பாசிட்டிவா சொன்னாங்க ஷிவானி.

ஷிவானிகிட்டயும் எந்த ஸ்ட்ராட்டஜியும் இல்லனு ஆஜித் சொன்னாரு.

ரியோவுக்கு இந்த வீட்ல நடக்கிற எல்லா விஷயத்துக்கும் கருத்து இருந்தாலும், அதை வெளிய எடுத்து வைக்கும் போது பிரச்சினை வந்துடுமோனு யோசிச்சு, மேலோட்டமா கருத்து சொல்றதா சொன்னாங்க ரம்யா

ஆரி மத்தவங்களை பத்தி குறை சொல்லும்போது பாதி உண்மையை மறைச்சு பேசுவாருனு நீண்ட விளக்கம் கொடுத்தாரு பாலா. பாலா பேசும் போது கமல் லைட்டா சிரிக்க, அதை பார்த்து ஆரியும் சிரிச்சதை கேமரா கேப்சர் செஞ்சுது.

ஆக்சுவலா பாலா இதைவிட ஷார்ப்பா பாயிண்ட் எடுத்து வைக்கக் கூடிய ஆள் தான். ஆனா நேத்து ரொம்பவே குழப்பத்துல இருந்திருப்பான்னு நினைக்கிறேன்.

அடுத்து நேரடியா எவிக்‌ஷன் தான். ஷிவானியை சேவ் பண்ணிட்டு ரம்யாவும் ஆஜித்தும் கடைசியா இருந்தாங்க. ரம்யா தான் கடைசியா சேவ் ஆவோம்னு நினைச்சு பார்த்துருக்க மாட்டாங்க. இறுதியா ஆஜித் எவிக்ட் ஆனான்.

ரொம்பவும் இயல்பா எடுத்துட்டு எல்லார் கிட்டயும் சொல்லிட்டு போனாரு ஆஜித். தன்கிட்ட இருந்த காயினை பாலா, ரம்யா, கேப்பி கிட்ட கொடுத்துடு போனார். அவர் பாடின "நல்லை அல்லை" பாடல் அட்டகாச ரகம். பிக்பாஸும் கூப்பிடு வாழ்த்து சொன்னார்.

வெளியே வந்து குறும்படம் பார்த்துடு, ஹவுஸ்மேட்ஸ் கிட்ட பேசிட்டு கிளம்பிட்டாரு.

அதுக்கப்புறம் வீட்டுக்குள்ள பாலாவும், ஷிவானியும் பேசிட்டு இருந்தாங்க. பாலாவோட தவறுகளை எடுத்து சொல்லிட்டு இருந்தாங்க ஷிவானி. பாலா தவறு செய்யும் போதே அவனை தடுத்து நிறுத்திருக்கலாம். அப்பவே ஸ்ட்ராங்கான கருத்தை எடுத்து வைக்கலாம் தப்பே இல்லை.

சோம், கேப்பி, ரியோ 3 பேரும் வெளிய உக்காந்து பேசிட்டு இருந்தாங்க. ரியோவை பத்தி ரம்யாவோட கருத்தை பத்தி டிஸ்கஷன் போய்ட்டு இருந்தது. அதுல கொஞ்சம் முரண்பட்டாலும், பிரச்சினை வேணாம்னு விலகி போறதை ஒத்துகிட்டாரு ரியோ.

ரியோ, சோம், கேப்பி உள்ள வரும் போது ஆரி தனி ஆளா லிவிங் ஆரியா, கிச்சன் எரியாவை க்ளீனிங் செஞ்சுட்டு இருந்தாரு.

ஆரி வேலை செஞ்சது நல்ல விஷயம். அதை யாரும் தவறு சொல்ல முடியாது. எல்லாருக்குமே மனநிலைனு ஒரு விஷயம் இருக்கும். மூட் சரியில்லைனு நாமளே சொல்லுவோம். தன்னோட தவறுக்கு வறுத்தெடுக்கப்பட்டு, அது முடிஞ்சு ஞாயிறுக்கான ப்ரொகிராமும் நடந்து, அதுல மன்னிப்பு கேட்டு முடிச்சு இருக்காரு பாலா. சோ அதுல இருந்து வெளியே வர யாரா இருந்தாலும் டைம் வேணும். அதைக் கூட கொடுக்க மாட்டேன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்னு தெரியலை.

எல்லாரும் பாருங்க, பாலா வேலை செய்யலை, ரம்யா தூங்கிட்டு இருக்கா. வாலண்டியருக்கு யாரும் இல்லை, அவங்க வெளியே ஜாலியா பேசிட்டு இருக்காங்க. நான் மட்டும் தான் வேலை செய்றேன். எல்லாரும் பாருங்க. இது தான் ஆரியோட ஸ்ட்ராட்டஜி. அடுத்த வாரம் பேசறதுக்கு ஒரு பாயிண்ட் ரெடி பண்ணிட்டாரு. அட்வான்ஸ்ட் திங்கிங்.

இந்த வாரம் என்ன நடக்குதுனு பார்ப்போம்.

You'r reading ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?? Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Bigg boss News