Thursday, Jan 20, 2022

கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??

நாமினேஷன் தினம். அதற்கு முன் ஆரியிடம் மீண்டும் விளக்கம் கேட்கிறார் பாலா. நான் முன்பே சொன்னது தான் ஆரியை உக்கார வைத்து பாயிண்ட்டாக பேசினால் அவரை எளிதாக மடக்கலாம். ஆனால் அவரின் உரையை கேட்க அழதயாராக இருக்க வேண்டும். அவரின் பாயிண்டிலிருந்தே அவரை மடக்க முடியும். மேலும் எந்த விதத்திலும் கோபம் கொள்ளாமல் மடக்கி மடக்கி கேள்வி கேட்டால் ஆரி வெகு சீக்கிரம் கோபம் கொள்வார். ஆரியை போல பாலாவும் நடந்து முடிந்த பல விஷயங்களை நினைவில் வைத்திருப்பார். ஆரியின் பல கருத்துக்களில் முரண்பாடுகள் இருக்கும். அதை வெளியில் கொண்டு வந்தாலே போதும். ஆனால் அதை செய்ய யாருக்கும் பொறுமை இல்லை. ஆரி மேல் இருக்கும் கோபம் அவர்களை யோசிக்க விடாமல் செய்கிறது.

ப்ரீஸ் டாஸ்க்கில் மற்றவர்களுடன் ஜாலியாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு, தான் ரூல்ஸை பாலோ செய்து விளையாடியதாக ஆரி தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். அது தான் ஆரியின் பலம். தனது கருத்துல இருந்து அந்த பக்கம் இந்த பக்கம் நகருவதில்லை. ஆனால் அவரது லாஜிக்கை எளிதாக உடைக்க முடியும். ஏனெனில் ரியோவின் குற்றச்சாட்டில் நியாயம் உள்ளது லாஜிக் உள்ளது. ரியோவின் குற்றச்சாட்டிற்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத ஒரு பதிலை ஆரி சொல்கிறார். ஆனால் அவரிடம் விளக்கம் அளித்து அவரை மடக்கும் பொறுமை ரியோவிற்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால் தன்னுடைய குற்றச்சாட்டில் உள்ள நியாயத்தை எப்படி புரிய வைப்பது என்றே தெரியவில்லை. பாலாவை பொறுத்தவரை அவருடைய கோபம் தான் அவருக்கு எதிரி.

நேற்று ஆரியை உக்கார வைத்து தொடர்ந்து கேள்விகள் கேட்ட போது ஆரி உஷ்ணமானார். அது தான் ஆரியுடைய ப்ரேக்கிங் பாயிண்ட்.

நாமினேஷன் நேரம்.

ஆரி, ரம்யாவை நாமினேட் செய்தார் பாலா. பாலா, ரியோவை நாமினேட் செய்தார் ஆரி. ரியோவை நாமினேட் செய்யும் போது ஆரி சொன்ன காரணம் தான் நான் மேலே சொன்ன விஷயம். ஆரியை பொறுத்தவரை கணக்கு பரிட்சைக்கு கொஸ்டின் பேப்பர் கொடுத்தால், அதில் சயின்ஸ் பரிட்சைக்கான பதிலை எழுதிவிட்டு அது தான் சரி என்று சாதிப்பார். அவரிடம் கேட்கப்படும் கேள்விக்கு பதிலின்னொரு கேள்வியாக தான் வரும். நேரடி பதில் எப்போதும் வராது.

தன் மகள் வரும்போது கூட தான் அசையாமல் இருந்ததை இதுவரை 3 முறை சொல்லிவிட்டார். தான் ரூல்ஸை மீறவில்லை என்று ஒற்றைக்காலில் சாதிக்கிறார். ஆனால் அவர் ரூல்ஸை மிறிய வீடியோ கிளிப்பிங் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் தன்னுடைய தவறை ஏற்றுக்கொள்ளாமல், அதை சுட்டிக் காட்டியவரையே குற்றவாளி ஆக்குவது எந்த விதத்தில் நியாயம்.

ரம்யாவை நாமினேட் செய்யும் போது கேப்பி சொன்ன காரணம் நுணுக்கமானது. ரம்யா தன்னுடன் க்ளோசாக இருக்கும் நபர்களுக்கு ஆதரவாக கருத்தை எடுத்து வைக்கிறார், அந்த கருத்து பெரும்பாலும் ஆரிக்கு எதிரானதாகவே இருக்கிறது என்று சொன்னார்.

இந்த வாரம் ரம்யாவுக்கு முன் கேப்பி சேவ் ஆனார். அதற்கான காரணம் ரம்யா ஆரியை எதிர்ப்பது தான். வீட்டில் இருந்து வந்தவர்கள் சொன்னது, கமல் சொன்னது, எவிக்‌ஷன் ரிசல்ட் அனைத்தும் சேர்ந்து கேப்பியை ஆரியை நோக்கி தள்ளுகிறது. ஆரியை எதிர்க்காமல் இருந்தாலே இவ்வளவு ஓட்டுக்கள் கிடைக்கும் போது, ஆரியோடு சேர்ந்து நின்றால் இன்னும் அதிக ஓட்டுக்கள் கிடைக்கும் என்ற கணக்கு. அதற்கு ரம்யாவை எதிர்ப்பதன் மூலம், லேசாக தூண்டி விடுவதன் மூலம் ஆரியின் பக்கம் நகர முடியும் என்று காய் நகர்த்துகிறார் என்றே தோன்றுகிறது. இது ஸ்ட்ராட்டஜி என்ற வகையில் தவறே சொல்ல முடியாது. கேப்பியை பொறுத்தவரை தன்னை உதாசீனப்படுத்திய பாலா தான் அவருடைய டார்கெட். ரம்யாவுக்கும் அவருக்கும் நேரடியாக எந்த பிரச்சினையும் இல்லை. அப்படி இருக்கையில் ரம்யாவை தூண்டி விடுவதன் மூலம், நாளை ரம்யாவுடன் பிரச்சினை வந்தால் ஆரி தன் பக்கம் இறங்குவார் என்ற கணக்கு. சென்ற வாரம் கிச்சனில் இருந்த கேப்பியை ஆரி வெகுவாக பாராட்டியதும் ஒரு காரணம்.

இது நல்ல ஸ்ட்ராட்டஜி தான். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஆரி-ரியோ பிரச்சினையிலும் அவர் ஆரியின் பக்கமே சாய்வது தான் தவறாக தோன்றுகிறது. இத்தனை நாட்களாக மிக நெருக்கமான நட்பில் இருந்து விட்டு, இப்போது ஆரியின் ஆதரவுக்காக ரியோவை டீலில் விடுகிறார் கேப்பி.

ரியோவின் ஸ்ட்ராட்டஜி குறித்து ரம்யாவின் பேச்சை கடுமையாக கண்டிக்கும் கேப்பி, ரியோ குறித்தான ஆரியின் கருத்தை எதுவும் பேசாமல் கடந்து போகிறார். அதுவும் ஆரி குறித்து ரியோ புலம்பிய போதும், ரியோவுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை பேசவில்லை கேப்பி. இது தான் அவரின் நேர்மையை சந்தேகிக்க வைக்கிறது.

நாமினேஷன் முடிந்த பிறகு இது கடைசி நாமினேஷன் ஆதலால் வீட்டில் உள்ள அனைவரும் நாமினேஷனுக்கு செல்கிறார்கள் என்று டிவிஸ்ட் கொடுத்தார் பிக்பாஸ்.

இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க் டிக்கெட் டூ பைனல் போட்டியாக மாறியிருக்கிறது. இந்த வாரம் முழுவதும் நடக்கும் போட்டிகளில் அதிக புள்ளிகள் பெறுபவர் எவிக்‌ஷனுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அதிலிருந்து காப்பாற்றப்பட்டு பைனல் செல்ல தகுதி பெறுவார். அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கு. நபர் வெளியேற்றப்படுவார் என பிக்பாஸ் அறிவித்தார். எவிக்‌ஷன் டாப்பிள் கார்டில் அனிதா தப்பித்து சம்யுக்தா மாட்டியதை போல, இந்த வாரம் நடக்க வாய்ப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

முதல் போட்டியில் தண்ணிர் நிரப்பப்பட்ட ஒரு பலூனை கையை நீட்டி பிடித்தபடி நிற்க வேண்டும். அத4கு கீழே ஆணி பலகை ஒன்று இருக்கும். கொஞ்சம் கீழே இறக்கினாலும் பலூன் வெடித்து விடும். உடல் வலு சார்ந்த போட்டி என்பதால் பெண்கள் விரைவாக வெளியேறினார்கள். தன்னுடைய விளையாட்டில் கவனம் செலுத்தாமல் அடுத்தவர்கள் தவறு செய்கிறார்களா என்று சூப்பர்வைஸ் செய்த ஆரியும் விரைவில் வெளியேறினார். இறுதியில் ரியோவும் பாலாவுமிருந்த நிலையில் பாலா வென்றார்.

சோமிற்கு முன்பே அரி வெளியேறினாலும் சோம் கையை வளைத்து விதியை மீறியதால் அவரின் இடத்தை க்ளைம் செய்தார் ஆரி. விதியை ஆரியும் மீறியதான சோமின் குற்றச்சாட்டிற்கு, "என் கை அப்படி வளைஞ்சுருந்தா நான் போட்டியை விட்டு வெளியே போயிடறேன்" என்று அதீத ரியாக்சன் கொடுத்தார் ஆரி. இறுதியில் சோமும் விட்டுக் கொடுத்துவிட்டார். ஆனால் உண்மை என்னவெனில் ஆரியும் கையை வளைத்து விதியை மீறிய புகைப்படம் இன்று வெளியாகிவிட்டது.

அடுத்ததாக ஒரு சிறிய கட்டையை தலையில் வைத்து முட்டுக் கொடுத்து பிடிக்க வேண்டும். சரியான உயரமுள்ள கட்டையை தேர்ந்தெடுக்காதவர்கள் விரைவில் வெளியேறினர். ரம்யா வெற்றி பெற்றார், ரியோ இரண்டாவதாக வந்தார்.

இந்த வாரம் முழுவதும் கடினமான போட்டிகள் இருக்குமா? அல்லது சண்டை மூட்டி விடும் போட்டிகள் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

You'r reading கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?? Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Bigg boss News