அமேசான் ப்ரைம் உறுப்பினர் கட்டணம் உயர்வு

by Isaivaani, Apr 30, 2018, 14:47 PM IST
அமேசான் 'ப்ரைம்' பிரிவு உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 10 கோடிக்கும் மேலான உறுப்பினர் இருப்பதாக அமேசான் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பேசோஸ், அதன் பங்குதாரர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
 
அமேசான் 'ப்ரைம்'சேவையில் பல சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை இருப்பதாக அமேசான் கூறியுள்ளது. 'ப்ரைம்' சேவை உறுப்பினர்களுக்கு ஆர்டர் செய்து இரண்டே நாட்களில் கிடைக்கக்கூடிய வகையில் முன்பு 2 கோடி பொருட்கள் இருந்தன. தற்போது அது 10 கோடியாக அதிகரித்துள்ளது.
அனுப்பும் செலவு, வீடியோக்களுக்கான செலவு போன்ற சேவைகளுக்கான விலையுயர்வே, கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ள அமேசான் தலைமை நிதி அதிகாரி பிரையன் ஆல்வாஸ்கி, 'ப்ரைம்' சேவைதாரர்களுக்கு கூடுதல் டிஜிட்டல் பலன்கள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
முதலீட்டாளர்களின் கூட்டத்தின்போது இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. 2014-ம் ஆண்டில் 'ப்ரைம்' சேவை உறுப்பினருக்கான ஆண்டு கட்டணம் 79 டாலரிலிருந்து 99 டாலராக உயர்த்தப்பட்டது. மீண்டும் இந்த ஆண்டு அக்கட்டணம் 99 டாலரிலிருந்து 119 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. 
வரும் மே மாதம் 11-ம் தேதியிலிருந்து இக்கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படும். புதுப்பிக்கும் உறுப்பினர்களுக்கு ஜூன் 16-ம் தேதி முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படும். 10,99 டாலராக இருந்த 'ப்ரைம்' சேவைக்கான மாத சந்தா ஏற்கனவே 12.99 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டின் முதல் காலாண்டில் அமேசான் 1.6 பில்லியன் டாலர் லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டு லாபத்தை விட இருமடங்குக்கும் அதிகமாகும். வியாழன்று அமேசான் பங்குகளின் மதிப்பு 7%  உயர்ந்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More Business News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை