எத்தனை வகையான தனிநபர் கடன் உள்ளது தெரியுமா?

வங்கிக்கடன் வாங்குவதற்கு முன் அதைபற்றிய விவரங்களை முழுமையாக தெரிந்துக்கொண்டு கடன் பெறுவது சிறந்த ஒன்றாகும்

by Vijayarevathy N, Sep 19, 2018, 19:41 PM IST

வங்கிகளில் அலையோ அலையோ அலைந்து தனிநபர் கடன் வாங்குவதற்குள் நாம் படும்பாடு ஐய்யயயோ சொல்ல வார்த்தை இல்லை. இதனால் நேரம்தான் வீணாகும். இதுவே வங்கிக்கடன் வாங்குவதற்கு முன் அதைபற்றிய விவரங்களை முழுமையாக தெரிந்துக்கொண்டு கடன் பெறுவது சிறந்த ஒன்றாகும். அந்த வகையில் தனி நபர் கடன் பல்வேறு வகைகளில் வழங்கப்பட்டுகிறது. அவை என்ன என்பதை பற்றி காண்போம்...

தனி நபர் கடன் என்றால் என்ன?

தனி நபர் கடன் ரூ.40 லட்சம் வரையில் மட்டுமே அளிக்கப்படும். தனி நபர் கடன் வேண்டும் என்றால் குறைந்தது ரூ.5000 கடனாக பெற வேண்டும். 

தனி நபர் கடனுக்கு கண்டிப்பாக கிரெடிட் ஸ்கோர் தேவைப்படும். கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் வட்டி விகிதம் மற்றும் கடனை செலுத்தும் கால அளவு மாறும்.

தனிநபர் கடன் பெற முகவரி மற்றும் அடையாள ஆவணம், வருமான சான்றிதழ், வங்கி அறிக்கை போன்றவை சமர்ப்பிக்க வேண்டும். தனி நபர் கடனில் சலுகைகள் ஏதும் கிடைக்காது.

தனி நபர் கடனை 5 வருடங்களுக்கு செலுத்த வேண்டும். அதற்கு ஏற்றார் போல வட்டி விகிதம் உயரும்.

தனி நபர் கடன் வகைகள்:

  1. தொழில் கடன்
  2. திருவிழாக் கடன்
  3. வீடு புதுப்பித்தல் கடன்
  4. நிரந்திர விகிதக் கடன்
  5. நுகர்வோர் நீடிப்பு கடன்
  6. திருமணக் கடன்
  7. விடுமுறை காலக் கடன்

இவை அனைத்தும் வங்கிகளில் தரப்படும் தனி நபர் கடன் வகைகளாகும்.

You'r reading எத்தனை வகையான தனிநபர் கடன் உள்ளது தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

More Business News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை