பொய் செய்திகளை எழுதி வரும் ஒன் இந்தியா செய்தி இணையதளம்..

by Simon, Apr 26, 2020, 21:28 PM IST

தமிழகத்தில் கொரோனோ தாக்கம் அதிவேகமாகப் பரவி வருகிறது. கொரோனோவை கட்டுப்படுத்தும் விதமாக மே 3வரை 144 ஊரடங்கை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.
ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் ஏழை எளியவர்கள், அன்றாடம் கூலி வேலை செய்யும் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் வருமானம் இன்றி சாப்பாட்டுக்குக் கஷ்டப்படும் நிலை உருவாகியுள்ளது. பல இடங்களில் தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற உதவியைச் செய்து வருகின்றனர்.

கடந்த 18 நாட்களாக நடிகர் இமான் அண்ணாச்சி தனது இணைந்த கைகள் டிரஸ்ட் மூலமாகத் தானே பிரியாணி சமைத்து, தானே சென்று சென்னை கோயம்பேடு மற்றும் பிற பகுதிகளிலும் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் சாலையோரங்களில் இருக்கும் ஆதரவற்றோர்களுக்கும் மதிய உணவு வழங்கி வருவது பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் கலாம் என்ற அறக்கட்டளையுடன் இணைந்து நடிகர் இமான் அண்ணாச்சி தினமும் இந்த உதவிகளைச் செய்து வருவதாகத் தவறான செய்தி ஒன்றை ஒன் இந்தியா செய்தி இணையதளம் வெளியிட்டுள்ளது. இது குறித்து ஒன்இந்தியாவைத் தொடர்பு கொண்டு இணைந்த கைகள் டிரஸ்ட் ஊழியர் ஒருவர் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தவறான செய்தி என்று கூறியும் செய்தியை மாற்றாமல் இருப்பது செய்தி எழுதிய எடிட்டரும் கலாம் என்ற அறக்கட்டளையும், இமான் அண்ணாச்சியின் பெயரைப் பயன்படுத்தி, ஏழைகளுக்கு உதவுவது போல் பணம் வசூல் செய்து மோசடி செய்கிறார்களோ என்று சந்தேகம் எழுந்துள்ளது.


Speed News

  • தெருவுக்கு வாங்கய்யா..

    யஷ்வந்த் சின்கா ட்விட்

    முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா? இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார். 

    May 23, 2020, 14:18 PM IST
  • சிறப்பு ரயில்கள் வேண்டாம்..

    மேற்கு வங்கம் கோரிக்கை

    மேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், தற்போது சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு அம்மாநில அரசு கோரியு்ள்ளது. இது தொடர்பாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவுக்கு தலைமைச் செயலாளர் ராஜு சின்கா கடிதம் அனுப்பியு்ள்ளார், அதில், சிறப்பு ரயிலில் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பரிசோதனைக்கு உள்ளாக்கி, தனிமைப்படுத்துவதற்கு இயலாத சூழல் உள்ளதால், வரும் 26ம் தேதி வரை சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு கோரப்பட்டுள்ளது. 

    May 23, 2020, 13:57 PM IST
  • மகாராஷ்டிராவில் 44 ஆயிரம்

    பேருக்கு கொரோனா பாதிப்பு

    நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 44,582 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதில், 12,583 பேர் குணமடைந்துள்ளனர். 1517 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். மாநிலத்தில் மும்பையில்தான் அதிகபட்சமாக 27 ஆயிரம் பேருக்கு கொரானா தொற்று பரவியிருக்கிறது.

     

    May 23, 2020, 13:53 PM IST
  • ஒரு லட்சத்து 6,750 பேருக்கு

    கொரோனா பரவியது..

    நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து  1,139 பேரில் இருந்து  ஒரு லட்சத்து 6,750 பேராக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,174ல் இருந்து 41,298 ஆக அதிகரித்து்ள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை  3,163ல் இருந்து 3,303 ஆக உயர்ந்துள்ளது.

    May 20, 2020, 13:42 PM IST
  • மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு

    1325 பேர் உயிரிழப்பு

    நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் மிகவும் அதிகமானோருககு கொரோனா பரவியிருக்கிறது. இது வரை 37,136 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் 1325 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். காவல்துறையில் மட்டும் 1388 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 428 பேர் குணமடைந்துள்ளனர். 12 பேர் பலியாகியுள்ளனர். 

    May 20, 2020, 13:37 PM IST