6 மாதத்துக்கு முன்பு நூழிலையில் தப்பிய பயணிகள்... அதே விமானம் மீண்டும் விபத்து

Passengers-who-escaped-the-wreckage-6-months-ago-the-same-plane-crashes-again

குஜராத் மாநிலம் அகமதபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர்இந்தியா விமானம் இன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட 244 பேர் இருந்தனர். பைலட்டுகள் உள்பட 12 சிப்பந்திகளும் இருந்தனர். விமானத்தில் 169 பேர் இந்தியர்கள், 53 பிரிட்டன்காரர்கள், 7 போர்ச்சுகல்காரர்கள், கனடாவை சேர்ந்த ஒருவர் பயணித்துள்ளனர். இது தவிர இருது பைலட்டுகள், 10 சிப்பந்திகளும் விமானத்தில் இருந்துள்ளனர். விபத்தில், 100 பேர் வரை இறந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அகமதாபாத் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த விமானத்தை கேப்டன் சுமீத் சுபர்வால் இயக்கியுள்ளார். இவர், 8,200 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவத்தை கொண்டவர். துணை பைலட் கிளைவ் குந்தார் 1,100 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் பெற்றவர். விமானம் 800 அடி உயரத்தில் இருந்து கீழே நோக்கி வர தொடங்கியுள்ளது. விமானத்தின் லேண்டிங் கியர் மீண்டும் விமானத்துக்குள் இழுக்கப்படவில்லை. இதனால், விமானம் பறக்க தொடங்கியதும் ஸ்டால்லிங் எனப்படும் காற்று முட்டுக்கட்டை காரணமாக திணற தொடங்கி இருக்கலாம். இந்த சமயத்தில் விமானம் மேற்கொண்டு பறக்க தேவையான த்ரஸ்ட்டை கொடுக்க விமானிகள் தவறியுள்ளதாக விமானத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

விபத்தையடுத்து, உறவினர்களை தேடி அகமதாபாத் விமான நிலையத்திலும் மருத்துவமனைகளிலும் உறவினர்கள் அலைபாய்ந்து வருகின்றனர். இந்த விமானம் 2009ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 6 மாதத்துக்கு முன்பும் பழுதாகியுள்ளது. இந்த விமானம் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லண்டனுக்கு 300 பயணிகளுடன் பயணித்த தயாராக இருந்தது. அப்போது, கடைசிக்கட்டத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். இதனால், 300 பயணிகள் உயிர் தப்பினார். பின்னர், கோளாறு நீக்கப்பட்ட பிறகு, மீண்டும் அகமதபாத்- லண்டன் மார்கத்தில் இயக்கப்பட்டு வந்தது.

இந்தியாவில் நடந்த இரண்டாவது மிகப் பெரிய விபத்து இதுவென்று கூறுகிறார்கள். கடந்த 1996ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் நடுவானத்தில் கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் விமானத்துடன் மோதிக் கொண்டது. ஹரியானாவில் சார்கி தத்ரி பகுதியில் நடந்த இந்த விபத்தில் 349 பேர் கொல்லப்பட்டனர்.