பெண்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்- ராஜேஸ்வரிபிரியா வலியுறுத்தல்

tasmac-shops-should-be-removed-from-areas-frequented-by-women-rajeshwaripriya

பெண்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா வலியுறுத்தியுள்ளார்

அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில் மாபெரும் பெண்கள் பாதுகாப்பு மாநாடு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் பகுதியில் நடைபெற்றது. கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பாஜக மூத்த தலைவரும் தெலங்கானா, புதுச்சேரி மாநில முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், முன்னாள் அமைச்சர் வளர்மதி இந்திய ஜனநாயக கட்சியின் செயல் தலைவர் ரவி பச்சமுத்து , என் ஆர் தனபாலன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினர். மாநாட்டில் பங்கேற்ற அனைத்து பெண்களும் தங்களது செல்போனில் டார்ச் லைட் அடித்து பெண்கள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்

தீர்மானம்:

இந்த மாநாட்டில், பாலியல் குற்றத்தில் தண்டனை பெற்றவர்களின் பெயர் விவரங்களை பொதுமக்கள் அறியும்படி தமிழக அளவில் பாலியல் குற்றவாளிகளுக்காக பொதுப் பதிவேடு உருவாக்க வேண்டும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றத்தில் தண்டனை பெற்றவர்களுக்கு அரசு வேலை, டெண்டர், நலத்திட்டங்கள் உள்ளிட்ட அனைத்திலும் நிரந்தர தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டில் அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா பேசுகையில், '' குற்றம் செய்பவர்களுக்கு அரசை பார்த்து பயம் வரவில்லை .அதனால் தான் குற்றங்கள் அதிகரிக்கிறது .பெண்கள் தைரியமாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும் . தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுகிறது. பெண்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் டாஸ்மாக் கடைகள் இருக்க கூடாது .

சினிமா நடிகரை பார்த்து இளம் பெண்கள் மயங்கி இருக்கிறார்கள். சில விவரம் புரியாத இளைஞர்களும் நடிகர் பின்னால் செல்கிறார்கள். ரசிகர் கூட்டத்தை வைத்து முதல்வர் ஆகிவிடலாம் என்று நினைப்பது சரியா விஜய் சார்? என்றும் கேள்வி எழுப்பினார்

READ MORE ABOUT :