சூர்யா, கார்த்தி இருவரில் யார் என் சாய்ஸ்? - ரகுல் ப்ரீத் சிங் `நச்' பதில்!

ஒரே நேரத்தில் சகோதரர்களான சூர்யா, கார்த்தி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். சூர்யாவுடன் என்.ஜி.கே. கார்த்தியுடன் தேவ் என இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். இதில் தேவ் வரும் 14ம் தேதி ரிலீசாக உள்ளது. இதுபோக சிவகார்த்திகேயனுடன் ஒரு படம், இந்தியில் அஜய் தேவ்கனுடன் ஒரு படம் என தென்னிந்திய சினிமா தாண்டி பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார் ரகுல். இதற்கிடையே, தேவ், என்.ஜி.கே படங்கள் குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் ரகுல். அப்போது, ``சூர்யா, கார்த்தி இருவரையும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. இருவரும் நல்ல திறமைசாலிகள்.

இருவரில் யார் சிறந்தவர்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. மேலும் இருவருடன் சேர்ந்து வேலைபார்க்கும் போது நல்ல ஜாலியாக இருக்கும். தமிழில் இந்த இரண்டு படங்களையும் ஒப்புக்கொள்ளும் போது தான் இந்தியில் அஜய் தேவ்கனுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இந்தப்படத்துக்கு 100 நாட்கள் கால்ஷீட் தேவைப்படுகிறது. இதேபோல் சிவகார்த்திகேயனின் புதிய படத்திலும் நான் நாயகியாக ஒப்பந்தம் ஆக்கியுள்ளேன். என்னைப் பொறுத்தவரை எந்த மொழியில் நடிக்கிறோம் என்பது முக்கியமில்லை. தினமும் ஏதாவது ஒரு படப்பிடிப்பில் இருக்க வேண்டும். அது தான் என் குறிக்கோள். அதை நோக்கியே பயணித்து கொண்டிருக்கிறேன்.

எல்லோரும் கேட்கிறார்கள் ஏன் இரண்டு நாயகிகள் இருக்கும் படத்தில் ஒப்பந்தம் ஆகிறாய் என்று. என் கதாபாத்திரம் எப்படி இருக்கிறது என்று மட்டுமே நான் பார்ப்பேன். மற்றவர்கள் யார் இருக்கிறார்கள் என்பதை பார்ப்பதில்லை. அதனால் தான் என்.ஜி.கேவில் இரண்டு கதாநாயகிகள் எனத் தெரிந்தும் ஒப்புக்கொண்டேன். அதைவிட செல்வராகவனின் மிகப்பெரிய ரசிகை நான். அவர் படத்தில் சின்ன கேரக்டர் என்றாலும் நல்ல பெயர் வாங்ககூடியதாக மாற்றுவார்.

என்னை பொறுத்தவரை ஒரு படத்தை இழந்துவிட்டோம் என என்றுமே கவலைப்பட்டதில்லை. நான் இதுவரை இழந்ததை பற்றி கவலைப்பட்டது இல்லை. அதேநேரம் சில படங்களில் நடிக்கும்போதே ஏன் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டோம் என்று வருத்தப்பட்டுள்ளேன்" என்று கூறினார்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

Recent News