மா கா பா ஆனந்த்தை பாடாய் படுத்தும் ஹரிஷ் கல்யாண்.. கலகல ஸ்னீக் பீக்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். பிக் பாஸ் நிகழ்ச்சி வழியாக அறியப்பட்டவருக்கு, பியார் பிரேமா காதல் படம் நல்ல ஓபனிங்கை கொடுத்தது. அடுத்ததாக, ஹரிஷூக்கு வெளியாக இருக்கும் படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ 
 
ஹரிஷ் கல்யாண்
 
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவரின் அடுத்த படம் தான் இந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் மார்ச் 15ம் தேதி வெளியாக இருக்கிறது.
 
இந்த படம் குறித்து ஹரிஷ் கல்யாணிடம் பேசும் போது, “ இந்தப் படம் காதலை மட்டுமல்ல, காதலின் புரிதலையும் பேசும். இன்றைய தலைமுறைக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும். இதில் இடம்பெறும் சில சம்பவங்கள் அனைவரது வாழ்விலும், சந்தித்ததாக இருக்கும் என்பதால் படம் நிச்சயம் ரசிகர்களால் விரும்பப்படும். படத்தின் கதையை ரஞ்சித் சொன்ன அடுத்த கணமே, இந்தக் கதை நிச்சயம் எனக்கு சவாலாக தான் இருக்கும் என்று நினைத்தேன். இந்த படம் காதலால், காதலுக்கான படம். நிச்சயம் யாரையும் புண்படுத்தாது. குறிப்பாக, பெண்கள் என்றென்றைக்கும் ஆண்களை சார்ந்தவர்கள் இல்லை என்பதை வலியுறுத்தியிருக்கிறோம்” என்று கூறினார். 
 
முன்னதாக படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பட புரோமோஷனுக்காக தற்பொழுது ஒரு ஸ்னீக் பீக் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. 
 

Ispade Rajavum Idhaya Raniyum Sneak Peek Link : https://goo.gl/e8AEbG

 
ரஞ்சித்தின் புரியாத புதிர் படத்துக்கு இசையமைத்த சாம்.சி.எஸ். தான் இந்த படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். ஜெயகாந்தன் எழுதிய ஒரு நாவலின் தலைப்பு ‘இதய ராணிகளும் இஸ்பேட் ராஜாக்களும்’ அதிலிருந்தே தலைப்பை இயக்குநர் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல். 
Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்