தெலுங்கில் அறிமுகமாகும் முன்னணி தமிழ் நடிகர்.. ஜோடியாகும் டப்ஸ்மாஷ் தேவதை

dubsmash mirnalini joins atharva in new telugu movie

by Sakthi, Apr 1, 2019, 21:49 PM IST
2014ல் வெளியாகி கோலிவுட்டையே திரும்பி பார்க்கவைத்த ஒரு ஜிகர்தண்டா திரைப்படம் தெலுங்கில் ரீமேக்காக இருக்கிறது. 
 
மிருணாளினி
 
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபிசிம்ஹா, லெட்சுமிமேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜிகர்தண்டா. தமிழில் கிடைத்த வெற்றியினால், படத்தை தெலுங்கு ரீமேக் வேலைகளைத் தொடங்கினார்கள். தெலுங்கில் இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் வால்மிகி என்கிற பெயரில் படம் உருவாகிவருகிறது. இதில் பாபி சிம்ஹா கேரக்டரில் வருண் தேஜ் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அதுபோல படத்தின் லீட் ரோலான சித்தார்த் கேரக்டரில் அதர்வாவும், லெட்சுமி மேனன் கேரக்டரில் நடிக்க டப்ஸ்மாஷ் புகழ் மிருணாலினியும் ஒப்பந்தமாகியிருப்பதா தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆக, நடிகர் அதர்வா தெலுங்கில் அறிமுகமாக இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இசையமைப்பாளராக தேவி ஸ்ரீபிரசாத் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ராம் அசன்டா, கோபி அசண்டா இணைந்து தயாரித்து வருகின்றனர். தமிழில் 10கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம், தெலுங்கில் 35 கோடி வசூல் செய்தது.  நேரடியாக தெலுங்கில் இந்தப் படம் தயாரானால் இன்னும் வசூல் அதிகமாகும் என்பதே தயாரிப்பாளர்களின் கணிப்பு. தெலுங்கு ரசிகர்களின் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக கூடுதால சில காட்சிகள் சேர்க்கவும் இருக்கிறாராம் இயக்குநர். 

You'r reading தெலுங்கில் அறிமுகமாகும் முன்னணி தமிழ் நடிகர்.. ஜோடியாகும் டப்ஸ்மாஷ் தேவதை Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை