இந்து - முஸ்லீம் மதங்களை மையமாக கொண்ட பிரமாண்ட படைப்பு... எதிர்பார்ப்பை தூண்டும் கலங் டிரெய்லர்

அலியா பட், மாதுரி தீக்ஷித் நடிப்பில் உருவாகிவரும் பிரம்மாண்ட பாலிவுட் திரைப்படமான கலங் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

கலங்

ஆலியா பட், சஞ்சய் தத், வருண் தவான், மாதுரி தீக்ஷித், சோனாக்ஷி சின்ஹா என பெரிய நடிகர் பட்டாளமே இணைந்திருக்கும் படம் `கலங்’. `ஜோதா அக்பர்’ படத்தை இயக்கிய அபிஷேக் வர்மா இப்படத்தை இயகியுள்ளார். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக காரணம் படத்தின் டீஸர்.

இந்து - முஸ்லீம் மதங்களை மையமாக வைத்து, 1945களில் சுதந்திரத்துக்கு முந்தைய நேரத்தில் நடக்கும் கதைக்களமே கலங். இரு வேறு மதத்தைச் சேர்ந்த இருவருக்கும் இடையிலான காதல் தான் படத்தின் ஒன்லைன். படத்தோட மற்றுமொரு ஹைலைட் , படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் கரன் ஜோகர் என்பதே. படத்தின் பாடல்கள் வெளியாகி சமீபத்தில் வைரலானது. குறிப்பாக, ப்ரீதம் இசையில் Ghar More Pardesiy பாடலில் மாதுரி தீக்‌ஷித்தும் அலியாபட்டும் இணைந்து பாடியிருப்பதும், அலியா பட் நடனமும் தான் ஹைலைட். தற்பொழுது படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் 17ல் வெளியாக இருக்கிறது.

Kalank Official Trailer:

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்