அவ்வ்வ்... மலர் டீச்சர் இப்படி மாறிட்டாங்களே… திக் திக் அதிரன் ட்ரெய்லர்

ஃபகத் ஃபாசில் நடிப்பில் மலையாளத்தில் உருவாகிவரும் அதிரன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

அதிரன்

தமிழில் விஜய்சேதுபதி, சமந்தாவுடன் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தார் ஃபகத் ஃபாசில். இப்படத்தைத் தொடர்ந்து ஃபகத்துக்கு  மலையாளத்தில்  வெளியாக இருக்கும் படம் அதிரன். ஃபகத்துக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கும் இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

அதிரன்

ரொமாண்டிக் த்ரில்லராக உருவாகிவரும் இப்படத்தில் முக்கிய கேரக்டர்களில் பிரகாஷ் ராஜ், அதுல் குல்கர்னி, சாந்தி குருஷ்ணா, லேனா, ரஞ்சி பணிக்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விவேக் இயக்கியிருக்கும் இப்படம் வருகிற ஏப்ரல் 12ல் வெளியாக இருக்கிறது.

பிரேமம், களி திரைப்படத்துக்கு பிறகு சாய் பல்லவி நடிக்கும் மூன்றாவது மலையாள திரைப்படம் அதிரன். இந்த படத்தில் சாய் பல்லவி வெள்ளை கவுனுடன் ஒரு சிறையில் உலா வருகிறார். சாய் பல்லவியை க்யூட்டான சுட்டி பெண்ணாகவே பார்த்த நாம், முதன்முறையாக வேறு கோணத்தில் காணப்போகிறோம் என்பது மட்டும் புரிகிறது.

Athiran Official Trailer Link : https://bit.ly/2YZmchi

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்