இன்ஸ்டகிராமில் பிரபாஸ் பாகுபலி படம் போட்டார்

Prabhas first photo on Instagram has a Baahubali connect.

by எஸ். எம். கணபதி, Apr 18, 2019, 12:46 PM IST

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ், இன்ஸ்டகிராமில் நுழைந்துள்ளார். அதில் அவர் முதலாவதாக தனது பாகுபலி படத்தின் புகைப்படத்தைத்தான் பதிவிட்டிருக்கிறார். அவர் பதிவிட்ட ஒரே நாளில் 8 லட்சத்து 69 ஆயிரம் பேர் லைக்ஸ் போட்டிருக்கிறார்கள்.

பிரபாஸ் தனது பாகுபலி-2 படத்திற்கு அடுத்தபடியாக சாஹோ என்ற ஆக்ஷன் திரில்லர் படத்தில் முழுமூச்சாக இறங்கியுள்ளார். கடந்த 2017ம் ஆண்டில் பாகுபலி-2 படம் வெளியானதும், அந்த ஆண்டு அக்டோபரில் தனது புதிய படத்தை பிரபாஸ் அறிவித்திருந்தார்.

பிரபாஸின் சாஹோ படம் 300 கோடிரூபாயில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்படுகிறது. இதில் ஆலியாபட் நடிப்பதாக இருந்தது. இப்போது நடிகை ஸ்ரதா கபூர், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டார் நடிக்கிறார்கள்.

You'r reading இன்ஸ்டகிராமில் பிரபாஸ் பாகுபலி படம் போட்டார் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை