மகிழ்ச்சியை பகிர எனக்காக யாருமே இல்லை...! –விவேக் வேதனை

actor vivek express his alone

May 3, 2019, 00:00 AM IST

தமிழ் திரை உலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகர் விவேக். சமூகத்தில் பரவியிருக்கும் லஞ்சம், மூட நம்பிக்கை, ஏற்றத்தாழ்வு, அரசியல் உழல்கள் போன்ற பல கருத்துகளைத் தனது நடிப்பின் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைப்பதில் இவர் கில்லாடி.

ஒரு கோடி மரக்கன்றுகளை நடுமாறு மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கூறியதையடுத்து ‘’கிரீன் கலாம்’’ என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம், தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் சேவையில் தன்னை ஈடுபடுத்துக் கொண்டிருக்கிறார். தமிழ் திரை உலக வட்டத்தையும் தாண்டி, சமூகத்தில் விவேக்கிற்கு தனி மதிப்பு உண்டு. தமிழக அரசு விருது உள்ளிட்ட பல விருதுகள் இவரது நடிப்பிற்கு கிடைத்த மரியாதை.

இத்தனை நிறைகள் இருந்தும் விவேக்கின் தனிப்பட்ட வாழ்க்கையில் சில சோகங்கள் சூழ்ந்துள்ளன. விவேக்கிற்கு அவரின் தந்தை மீது அதீத பிரியம். அவர் மறைவுக்கு பிறகு கவலையில் மூழ்கியிருந்த விவேக்கை, அவரின் மகன் மீண்டு எழ செய்தான். ஆனால், துயரம் அவரை விடவில்லை. தந்தை இறந்த சில நாட்களிலேயே அவரது மகனும் இறந்துவிட, படும் வேதனையில் விழுந்தார் விவேக். நாட்கள் கடந்து சென்றுவிட்டாலும் மனத்தில் ஏற்பட்ட துயர வடுக்கள் ஆறாது என்பது விவேக் வெளியிட்டுள்ள பதிவில் தெரிகிறது.

அண்மையில், விவேக்கின் மாறுபட்ட வேடத்தில் வெளியான  ‘வெள்ளை பூக்கள்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ‘’இந்த படத்தின் வெற்றி கொண்டாட்டத்தை பகிர்ந்து கொள்ள தன் நண்பர்கள், ரசிகப் பெரு மக்களைத் தவிர, ஆசான் கே.பாலசந்திரன், அப்துல் கலாம், என் தந்தை, என் மகன்...என யாருமே இல்லை’’ என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிறரை மகிழ்விக்கும் நகைச்சுவை கலைஞனின் மனதில்தான் எத்தனை கனத்த சோகங்கள்!

இங்கிலாந்தில் உள்ள கோஹினூர் வைரத்தை மீட்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

You'r reading மகிழ்ச்சியை பகிர எனக்காக யாருமே இல்லை...! –விவேக் வேதனை Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை