சர்கார், பிச்சைக்காரனுக்கு டாட்டா.. டிஆர்பியில் முதலிடம் பிடித்த விஸ்வாசம்!

Viswasam creates Record breaking viewership in Tamil Cinema

by Mari S, May 9, 2019, 15:31 PM IST

சன் டிவியில் கடந்த மே 1ம் தேதி ஒளிபரப்பான விஸ்வாசம் படம் தமிழ் சினிமாவிலேயே அதிகம் பார்க்கப்பட்ட படமாக டி.ஆர்.பி ரேட்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.

கடந்த மே 1ம் தேதி உழைப்பாளர் தினம் மற்றும் அஜித்தின் பிறந்த நாள் என்பதால், விஸ்வாசம் படத்தை சரியான நேரம் பார்த்து மாலை 6 மணிக்கு ஸ்பெஷல் ஷோவாக சன் டிவி இறக்கியது.

சன் டிவியில் ஒளிபரப்பான விஸ்வாசம் படத்தை 1 கோடியே 81 லட்சத்து 43 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். இதன்மூலம் சன் டிவி மற்றும் தென்னிந்திய டிவி தொடர்களிலேயே ஒளிபரப்பு செய்யப்பட்ட படங்களில் விஸ்வாசம் முதலிடத்தை பிடித்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் 1 கோடியே 69 லட்சத்து 6 ஆயிரம் பேர் சன் டிவியில் பார்த்துள்ளனர்.

ஆனால், சன் டிவியில் ஒளிபரப்பான விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் திரைப்படம் தான் இதுவரையில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்தது. 1கோடியே 76 லட்சத்து 96 ஆயிரம் பேர் பிச்சைக்காரன் படத்தை பார்த்தனர்.

அந்த சாதனையை விஜய்யின் சர்கார் படம் முறியடிக்க முடியாமல் போனது. ஆனால், அஜித்தின் பிறந்த நாள் அன்று விஸ்வாசம் படம் வெளியான காரணத்தினால், டிஆர்பி ரேட்டிங்கில் விஸ்வாசம் திரைப்படம் முதலிடத்தை பிடித்து விட்டது.

பிரித்திவி, ரிஷப் களத்தில் இருந்தால்.... வெற்றியை விவரிக்கும் ஸ்ரேயாஸ் அய்யர்

You'r reading சர்கார், பிச்சைக்காரனுக்கு டாட்டா.. டிஆர்பியில் முதலிடம் பிடித்த விஸ்வாசம்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை