கமல் 60 இணையதளத்தை வெளியிட்ட சூர்யா!

Actor Suriya Sivakumar launched iKamalhasan website

by Mari S, Sep 6, 2019, 08:46 AM IST

உலகநாயகன் கமல்ஹாசனின் திரையுலக பயணம் 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதனை சிறப்பிக்கும் விதமாக தொடங்கப்பட்டுள்ள இணையதளத்தை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

நடிப்பின் நாயகன் கமல்ஹாசன், களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கி, கடாரம் கொண்டான் படத்தை தயாரித்தது வரை 60 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் தனது பாதசுவடுகளை பத்திரமாக பதித்து பிக்பாஸாக மாறியுள்ளார்.

கமல் போடாத கெட்டப் இல்லை, பேசாத வட்டார வழக்கு இல்லை என்று அவர் குறித்து பல பாராட்டு பத்திரங்களை பலரும் வாசித்த வண்ணமே அவரது மாணவர்களாக கலைத்துறைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

எங்கும் புதுமை எதிலும் புதுமை என்று அயல் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த பல டெக்னாலஜிகளை தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இறக்குமதி செய்த பெருமை கமலையே சாரும்.

60 ஆண்டுகள் தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாகவும் ரஜினியின் கலையுலக அண்ணனாகவும் திகழும் கமல்ஹாசனின் புகழை பெருமைப்படுத்தும் விதமாக ikamalhaasan.com என்ற இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த இணையதளத்தை நடிகர் சூர்யா துவக்கி வைத்துள்ளார். அண்ணன் என்று அழைப்பதா அல்லது சித்தப்பா என்று அழைப்பதா என்ற குழப்பம் தனக்கு இருப்பதாகவும், ஆனால் கமல்ஹாசனின் ரசிகன் என்ற கர்வத்துடன் இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பதை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சி அடைவதாகவும், வீடியோ ஒன்றில் பேசியுள்ள சூர்யா, தனது ட்விட்டர் பக்கத்தில், அன்பு அண்ணன்

@ikamalhaasan அவர்களின் கலைக்குடும்பத்திலும் ரசிகக்குடும்பத்திலும் ஒருவனான எனக்கு அவரின் கலையுலக பயணத்தின் 60வது ஆண்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தை வெளியிடும் வாய்ப்பு கிடைத்திருப்பதில் பெருமகிழ்ச்சி. இதோ என பாசத்தோடு ட்வீட் செய்து இணையதளத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த பக்கத்தில், கமல் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பல பிரபலங்கள் வாழ்த்தி கூறியுள்ள வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

You'r reading கமல் 60 இணையதளத்தை வெளியிட்ட சூர்யா! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை