Monday, Oct 18, 2021

தளபதி64 படத்தில் இணைந்த பிரபல நடிகை

Andrea Join in Thalapathy 64

by Chandru Oct 29, 2019, 22:44 PM IST

விஜய் நடித்த பிகில் தீபாவளியையொட்டி கடந்த 25ம் தேதி திரைக்கு வந்தது. அட்லி இயக்கியிருந்தார். இப்படம் கடந்த 4 நாட்களில் உலகம் முழுவதும் 150 கோடியை தாண்டி வசூல் சாதனை புரிந்திருப்பதாக தகவல் வருகிறது.

ஆனால் தளபதி 63 'பிகில்' படம் வெளிவருவதற்கு முன்பே தளபதி 64 படத்தின் பூஜை நடந்து படப்பிடிப்பும் தொடங்கி முதல் கட்டமாக நடந்துமுடிந்து 2ம் கட்ட படப் பிடிப்புக்கு படக்குழு டெல்லி செல்கிறது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் தீபாவளிக்கு வெளியான கார்த்தியின் கைதி படம் இயக்கியவர்.

விஜய்64ல் விஜய்யுடன் இணைந்து விஜய்சேதுபதி, சாந்தனு நடிக்கின்றனர் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தெரிகிறது.

You'r reading தளபதி64 படத்தில் இணைந்த பிரபல நடிகை Originally posted on The Subeditor Tamil

More Cinema News