சிம்புவின் மாநாடு படம் தொடங்குமா? தொடங்காதா? புதிய அப்டேட்...

by Chandru, Nov 5, 2019, 21:15 PM IST

சுந்தர் சி.இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்தார் சிம்பு. அதன்பிறகு புதிய படங்கள் எதிலும் நடிக்காமல் ஒதுங்கியிருக்கிறார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கும் மாநாடு படத்தின் பூஜை மற்றும் படப்படிப்பு தொடங்கப்பட்டது. தொடங்கிய வேகத்திலேயே படப்பிடிப்பு நின்றது. பட தரப்புக்கும் சிம்புவுக்கும் இடையான மோதலில் சிம்பு நடிக்க மறுத்தார்.

இதற்கிடையில் மாநாடு பட விவகாரத்தில் இருதரப்புக்கும் ஏற்பட்ட மோதல் சமரசத்துக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. மாநாடு படத்தில் நடிக்க சிம்பு ஒப்புக் கொண்டிருக்கிறாராம். எனவே மாநாடு தொடங்குவதற்கான பாசிடிவ் நகர்வுகள் ஆரம்பித்துள்ளன.


Leave a reply