Tuesday, Nov 30, 2021

கார்த்தி- ஜோதிகா பட உரிமையை கைப்பற்றிய நிறுவனம்.. கைதி படத்தால் தம்பி படத்துக்கு திடீர் மவுசு

Thambi Movie Rights Sold

by Chandru Nov 28, 2019, 18:59 PM IST
கமல்ஹாசன், கவுதமி நடித்த 'பாபநாசம்' படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் அடுத்து தம்பி என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் கார்த்தி, ஜோதிகா முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இதுவொரு ஃபேமலி த்ரில்லராக உருவாகிறது.
சொந்த வாழ்க்கையில் கார்த்தியின் அண்ணியான ஜோதிகா, தம்பி படத்தில் கார்த்திக்கு அக்காவாக நடித்திருக்கிறார். இவர்களது அப்பா, அம்மாவாக சத்யராஜ், சீதா நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். நவம்பர் 30ம் தேதி பட இசை வெளியாகிறது. வரும் டிசம்பர் 20ம் தேதி படம் திரைக்கு வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படம் வசூலில் தூள் கிளப்பியதால் தம்பி படத்துக்கு புதுமவுசு பிறந்திருக்கிறது. இப்படம் பல கோடிக்கு விநியோக உரிமையை எஸ்டிசி பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளது.
ஏள்கனவே இந்தநிறுவனம் தொரட்டி, திட்டம் போட்டு திருடுற கூட்டம், காவியன் படங்களை வெளியிட்டுள்ளது. அடுத்து சேரன் நடிக்கும் ராஜாவுக்கு செக், திரிஷா நடிக்கும் கர்ஜனை படங்களை வெளியிடுகிறது.

You'r reading கார்த்தி- ஜோதிகா பட உரிமையை கைப்பற்றிய நிறுவனம்.. கைதி படத்தால் தம்பி படத்துக்கு திடீர் மவுசு Originally posted on The Subeditor Tamil

More Cinema News