Tuesday, Nov 30, 2021

இயக்குனருக்கு தல தந்த அட்வைஸ்.. அடையாளத்தை மாற்றாதீங்க.

Gautham Menon about Thala Ajith

by Chandru Nov 28, 2019, 19:26 PM IST
தளபதி விஜய் , தல அஜீத் படங்களை இயக்கும் இயக்குனர்கள் அவர்களிடம் நல்லபெயர் வாங்குவதற்காக மாஸான காட்சிகள் வைத்து படமாக்குவது வழக்கமாக உள்ளது. அப்போது தான் தியேட்ரில் ரசிகர்கள் ஆர்ப்பரிப்பார்கள் என்று இயக்குனர்கள் கணித்து வைத்துள்ளனர். இந்நிலையில் தனக்கு மாஸ் காட்சி வைக்க வேண்டாம் என்று தல அஜீத், இயக்குனர் ஒருவரிடம் கூறினாராம்.
அஜீத் நடித்த என்னை அறிந்தால் படத்தை இயக்கியவர் கவுதம் மேனன். அப்போது அஜீத் தன்னிடம் கூறிய விஷயத்தை ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதுபற்றி கவுதம் மேனன் கூறும்போது,'என்னை அறிந்தால் படத்தில் அஜீத்துடன் பணிபுரிந்தேன். அப்போது அடிக்கடி என்னை அழைத்து, எனக்காக மாஸ் காட்சி வைத்து ஷூட் செய்யாதீர்கள்.
இது உங்கள் படம். என்னால் உங்கள் பாணி மாறக்கூடாது. பிறகு அஜீத் உங்களை மாற்றிவிட்டார் என யாரும் பேசக் கூடாது. எனவே நீங்கள் ஸ்கிரிப்ட்டில் என்ன நினைத்து எழுதினீர்களோ அதையே படமாக் குங்கள் என்றார்' என கவுதம் மேனன் குறிப்பிட்டார்.

You'r reading இயக்குனருக்கு தல தந்த அட்வைஸ்.. அடையாளத்தை மாற்றாதீங்க. Originally posted on The Subeditor Tamil

More Cinema News