வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா,, கலைப்புலி தாணு தயாரிக்கிறார்..

by Chandru, Dec 23, 2019, 14:38 PM IST

அசுரன் படத்தையடுத்து சூரி நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.

தனுஷ் நடிக்க வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் படத்தை தயாரித்த கலைப்புலி எஸ். தாணு இப்படத்தை தயாரிக்கிறார். எழுத் தாளர் பூமணி எழுதிய, 'வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டு அசுரன் படம் உருவானதுபோல் சூர்யா படமும் ஒரு நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளதாக தெரிகிறது.

சூர்யா தற்போது சுதா கொங்னா இயக்கும் சூரரைப்போற்று படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.


More Cinema News

அதிகம் படித்தவை