செல்பி எடுக்கும் சாக்கில் நமீதாவிடம் சில்மிசம்.. கடுப்பான நடிகை..

by Chandru, Jan 14, 2020, 23:24 PM IST
Share Tweet Whatsapp

நிமிர் என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை நமிதா பிரமோத். மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். செல்பி எடுக்கும் சாக்கில் இவரது உடலை சிலர் தொட்டு தடவி சிலுமிசம் செய்வதாக கூறினார்.

இதுபற்றி நமீதா கூறும்போது,'நடிகையாக இருப்பதில் கஷ்டமும் இருக்கிறது. பொது இடங்களுக்கு சென்றால் ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்டு அருகில் வந்து பேசி நன்றாக நடித்திருப்பதாக பேசும்போது சந்தோஷமாக உள்ளது. பெண்கள் ரசிர்களும். என்னிடம் அன்பாக பழகுகிறார்கள் புகைப்படம் எடுத்துக்கொள்கி றார்கள். சிறுவர்களும், பெண்களும் என்னை சகோதரிபோல் பாவித்து அன்பாக பழகுகிறார்கள். புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். இது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆனால் ரசிகர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் அருகில் வந்து செல்பி எடுப்பது போல் சிலுமிசம் செய்து உடலை தடவுகின்றனர். தோள் மீது கை வைக்கின்றனர். அது எரிச்சலாக இருக்கிறது. எனவே ஜனநெரிசல் உள்ள இடங்களுக்கு செல்லும்போது பர்தா அணிந்து செல்கிறேன்.
இவ்வாறு நமீதா புரமோத் கூறி உள்ளார்.


Leave a reply