10 ஆண்டு கழித்து நடிக்க வரும் நடிகை.. கல்யாணமாகி குழந்தை பெற்றபின் ஆசை..

by Chandru, Jan 18, 2020, 20:13 PM IST

நடிகை நவ்யா நாயரை ஞாபகம் இருக்கிறதா? மாய கண்ணாடி, ராமன் தேடிய சீதை போன்ற படங்களில் சேரன் ஜோடியாக நடித்தவர்தான் நவ்யா நாயர்.

மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் அழகிய தீயே, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக் கிளிகள், அமிர்தம் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.

தமிழில் வாய்ப்பு குறைந்து மலையாளத்தில் மட்டுமே நடித்து வந்தவர் திடீரென்று கடந்த 2010ம் ஆண்டு தொழில் அதிபர் சந்தோஷ் மேனனை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். இவருக்கு சாய் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார்.

குடும்ப வாழ்க்கையில் முழுமையாக கவனம் செலுத்துவதற்காக நடிப்புக்கு முழுக்குபோட்டார் நவ்யா. ஆனாலும் மேடை நிகழ்ச்சிகளில் தோன்றி பரத நாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். 10 ஆண்டு நடிக்காமல் ஒதுங்கியிருந்த நவ்யாவுக்கு மீண்டும் நடிப்பு ஆசை துளிர்விட்டிருக்கிறது. மலையாளத்தில் உருவாகும் 'ஒருத்தி' என்ற படம் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார். இப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மம்மூட்டி, நடிகை மஞ்சு வாரியர் வெளியிட் டனர். மலையாளத்தில் ரீஎன்ட்ரி ஆகும் நவ்யா நாயர் வாய்ப்பு கிடைத்தால் தமிழில் மீண்டும் நடிப்பாராம்.


More Cinema News