கீர்த்தியின் இந்தி பட வாய்ப்பு கைநழுவியது.. பருத்திவீரன் நடிகை கைப்பற்றினார்..

by Chandru, Jan 20, 2020, 15:45 PM IST

விஜய்யுடன் சர்கார் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் அதன்பிறகு ஒரு வருடம் புதிதாக தமிழ் படம் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. இந்தியில் நடிக்க செல்வதால் அதற்காக உடல் எடையை குறைத்து பாலிவுட் நடிகைகள்போல் ஒல்லியான தோற்றத்துக்கு மாறுவதற்கான கடுமையான பயிற்சிகள் செய்துவந்தார். அது பலன் கொடுத்தது. ஒரு கட்டத்தில் இது கீர்த்திதானா என்று கேட்கும் அளவுக்கு ஒல்லியாக மாறினார்.

இந்நிலையில்தான் மைதான் என்ற இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். கால்பந்தாட்ட கதையான இதில் அஜய் தேவ்கன் கால்பந்தாட்ட கோச்சாக நடிக்கிறார். ஒருவழியாக இந்தியில் கால் பதித்துவிட்டார் கீர்த்தி என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது அப்படத்திலிருந்து விலகி அதிர்ச்சி தந்திருக்கிறார்.

கால்பந்தாட்ட வீராங்கனையாகவும் ஒரு குழந்தையின் தாய் ஆகவும் கீர்த்தி நடிக்க வேண்டியிருந்த நிலையில் அவரது ஒல்லியான தோற்றத்தை பார்த்து பட தரப்பு ஷாக் ஆனது. இந்த கதாபாத்திரத்துக்கு அவர் மிகவும் இளமையாக இருப்பார் வேட பொருத்தம் சரியாக இருக்காது என்று எண்ணத் தொடங்கினர். எதற்கும் ஒரு நாள் ஷூட்டிங் நடத்திப்பார்க்கலாம் என்று கீர்த்தியை வைத்து காட்சிகள் படமாக்கினார்கள். அது திருப்தி இல்லை என்று தெரிய வந்தையடுத்து கீர்த்தியே அப்படத்தி லிருந்து விலகிவிட்டார். அவரது கதாபாத்திரத்தில் தற்போது பருத்திவீரன் பிரியாமணி நடிக்கிறார். ஏற்கனவே இவர் இந்தியில் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்திருந்தார்.

இந்தி படத்திலிருந்து கீர்த்தியை நீக்கியது பற்றி பட தரப்பு அளித்துள்ள விளக்கத்தில். ஒரு குழந்தைக்கு அம்மாவாக. அஜய்த்வ்கனுக்கு ஜோடியாகவும் கீர்த்தி சுரேசை முதலில் தேர்வு செய்தபோது பொருத்தமாக இருந்தார். இப்போது வெயிட் குறைந்து ஒல்லியாகி விட்டார் சில நாட்கள் கீர்த்தியை வைத்து படப்பிடிப்பை நடத்தினோம். குழந்தைக்கு அம்மாவாக நடிக்க அவரது உடல்வாகு பொருந்தவில்லை* என தெரிவிக்கப்பட்டுள்ளது.


More Cinema News