கஸ்தூரிக்கு டிவிட்டரில் ஆபாச மெசேஜ்.. அஜீத், ஷாலினியிடம் நடிகை புகார்..

by Chandru, Jan 21, 2020, 20:12 PM IST
Share Tweet Whatsapp

ரஜினிகாந்த், கமல், விஜய், அஜீத் என எந்த நடிகராக இருந்தாலும் அவர்களைப்பற்றி சில அதிரடியான கருத்துக்களை டிவிட்டரில் பகிர்கிறார் நடிகை கஸ்தூரி. இதற்காக அந்தந்த ரசிகர்கள் அவருக்கு கண்டனம் தெரிவிப்பதும், அவர்களுக்கு கஸ்தூரி பதிலடி தருவதும் வழக்கம். இம்முறை அவர்கள் கிண்டல் அளவுகடந்துவிட்டதாக தெரிகிறது.

அஜீத் ரசிகர் ஒருவர் ஆபாச வார்த்தையில் கஸ்தூரியிடம் பேசினாராம். அதற்கு கஸ்தூரி யும் நறுக்கான பதில் அளித்தார். அத்துடன் அவரது மனம் ஆறவில்லை. இதுகுறித்து அஜீத்குமாருக்கும், ஷாலினிக்கும் அவர் ஒரு வேண்டுகோள் விட்டிருக்கிறார். ஆபாசமாக பேசும் அஜீத் ரசிகர்களை கண்டிக்க வேண்டும் என கேட்டிருக்கிறார் கஸ்தூரி.

இந்த டிவிட்டர் உரையாடல் மெசேஜை ஸ்கிரீன் ஷாட் எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் கஸ்தூரி இதையடுத்து டர்ட்டி கஸ்தூரி, டர்ட்டி அஜீத் பேன்ஸ் என்ற ஹேஷ்டேக் நெட்டில் டிரெண்டானது.


Leave a reply