மாடி விட்டு மாடி தாவும் விஜய் நடிகை.. சண்டை பயிற்சியில் தீவிரம்..

by Chandru, Jan 21, 2020, 20:17 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இதில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய்சேதுபதியுடன் மாளவிகா மோதும் சண்டை காட்சிகள் இடம்பெறுகிறது.

இதற்காக பார்கோ எனப்படும் புதுவகை பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார் மாளவிகா. ஹாலிவுட் பட ஆக்‌ஷன் காட்சிகளில் இந்த பார்கோ வகை பாணி பயன்படுத்தப்பட்டுள்ளது. யூ டியூப்களிலும் இந்த வகை பயிற்சி விறுவிறுப்பாக வீடியவாக வெளியாகி உள்ளது.

அதாவது ஒன்றுக்கொன்று நீண்ட இடை வெளி உள்ள இடங்களை ஒரே பாய்ச்சலில் தாண்டிக்குதிப்பது, ஒரு மாடியிலிருந்து மற்றொரு மாடிக்கு தாவி உடனே கீழே குதித்து மீண்டும் அடுத்தடுத்த இடங்களை தாண்டி செல்வதுபோன்ற பயிற்சிதான் பார்கோர் எனப்படுகிறது. அந்த கலையைத்தான் மாளவிகா கற்றிருக்கிறார். இதை விஜய்சேது பதியுடன் மோதும் சண்டை காட்சிகளில் அவர் பயன்படுத்துகிறாராம்.

ஏற்கனவே 'அதோ அந்த பறவை போல' படத்துக்கு இஸ்ரேலில் பயன்படுத்தப்படும் கிராமகா எனப்படும் தெருச் சண்டை பாணி யிலான சண்டை பயிற்சியை அமலாபால் மேற்கொண்டு நடித்துள்ளார். அதுபோல் அடிமுறை எனப்படும் பழம்பெரும் தமிழர் சண்டை பயிற்சி கலையை கற்று பட்டாஸ் படத்தில் நடித்தார் நடிகை சினேகா.


Leave a reply