நடிகர் சாந்தனு அனுப்பிய பாடல்... டான்சுக்கு டிப்ஸ் தர தயாரான சிவா..

by Chandru, Jan 23, 2020, 20:35 PM IST

டைரக்டர் கே.பாக்யராஜ் மகன் சாந்தனு. குழந்தை நட்சத்திரமாகி பின்னர் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், இராவண கோட்டம், கசட தபர, வானம் கொட்டட்டும்' படங்களில் நடித்து வருகிறார்.

சிவா - பிரியா ஆனந்த் நடித்த வணக்கம் சென்னை படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை மேடையில் பாடியதை சாந்தனு தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதனை நடிகர் சிவாவுக்கும் டேக் செய்து அனுப்பினார். திடீரென்று பாடச் சொன்னார்கள் பாடினேன். ஒரு சில வரிகள் தவறாக இருக்கலாம் அதை கண்டுகொள்ளாதீர்கள் என குறிப்பிட்டிருந்தார்.
சாந்தனுவின் இந்த பாடலை கேட்ட சிவா குறும்புத்தனமாக தனது பாணியில் பதில் அளித்திருந்தார். பாட்டெல்லாம் ஓகே நல்லா பாடிருக்கே மச்சான் , டான்ஸ் டிப்ஸ் வேண்டுமென்றால் தயக்கம் இல்லாமல் எனக்கு போன் பண்ணு என கலாய்த்திருக்கிறார்.


More Cinema News