வரும் செப்டம்பருக்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தல்.. ஐகோர்ட் உத்தரவு..

by Chandru, May 23, 2020, 01:24 AM IST

சென்னை ஐகோர்ட்டு சமீபத்தில் ஜூலை 30 ம் தேதிக்குள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டது. அதன்படி தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட சில காரணங்களை காட்டி தேர்தலை தள்ளிவைக்க கேட்டு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த ஐகோர்ட் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். அதுபற்றி சிறப்பு அதிகாரி அக்டோபர் 30 ம் தேதிக்குள் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


More Cinema News