தமிழில் ஆர்யா. நவ்திப் நடித்த அறிந்தும் அறியாமலும் படத்தில் நடித்ததுடன் தெலுங்கு படங்களிலும் நடித்தவர் சமேக்ஷா. இவர் இந்தி பஞ்சாபி டிவி தொடர்களிலும் நடித்திருக்கிறார். சமேக்ஷா தனது காதலனும் சிங்கப்பூர் தொழில் அதிபருமான, பாடகருமான ஷேல் ஓஸ்வால் என்பவரை குருத்வாராவில் திருமணம் செய்து கொண்டார்.கொரோனா ஊரடங்கு காரணமாக குடும்பத்தினர் யாரும் திருமணத்தில் பங்கேற்கவில்லை. மணமக்களின் பெற்றோர் கூட ஆன்லைனில் திருமண நிகழ்ச்சிகளைப் பார்த்தனர். திருமணமும் மிகவும் எளிமையானது.
திருமணம் பற்றி சமேக்ஷா கூறும்போது, நாங்கள் குருத்வாராவில் இரண்டு பேர் மட்டுமே இருந்தோம். எங்கள் திருமணத்தை எங்கள் குடும்பத்தினர் ஆன்லைனில் தான் பார்த்தனர்.
ஒரு மியூசிக் வீடியோவின் படப்பிடிப்பின் போது தான் நாங்கள் சந்தித்தோம். படப்பிடிப்பு நடந்த நேரத்தில், நாங்கள் ஏற்கனவே சந்தித்தவர்கள் போல் எங்களுக்குத் தோன்றியது.
சிங்கப்பூரில் டீஸர் மற்றும் ஆடியோ அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் லாக் டவுன் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக முழு பாடலையும் எங்களால் படமாக்க முடியவில்லை. அதன்பிறகு நாங்கள் வீட்டில் பாடலை படமாக்கினோம்.
எங்களுக்குள் காதல் மலர்ந்ததை உணர்ந்தோம் இருவரும் காதலைப் பரிமாறிக் கொண்டோம். திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம் அது நல்லவிதமாக நடந்திருக்கிறது.
இவ்வாறு சமேக்ஷா கூறினார்.