திரிஷாவை மணக்கிறார் சிம்பு? நெட்டில் தீயாய் பரவும் புதிய பரபரப்பு..

Is Simbu-Trisha are getting married

by Chandru, Jul 22, 2020, 10:27 AM IST

நடிகர் சிம்பு, திரிஷாவை மணக்க உள்ளதாக நெட்டில் பரபரப்பு எழுந்துள்ளது. சிம்புவும் திரிஷாவும் டைரக்டர் கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்தனர். அப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றதுடன் சிம்பு. திரிஷா பொருத்தமான ஜோடியாக இருந்ததாக விமர்சனங்கள் வந்தன. விண்ணை தாண்டி வருவாயா படத்தின் 2ம் பாகம் உருவாகவிருப்பதாகக் கடந்த ஆண்டே கவுதம் மேனன் அறிவித்தார். ஆனால் கொரோனா லாக்டவுன் அனைவரது திட்டத்தையும் பாழாக்கி விட்டது. யாரும் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாதபடி முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனாலும் இப்படத்தின் முன்னோட்டமாக, கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் உருவானது.

இதனைக் கவுதம் மேனன் இயக்கினார். சிம்பு. திரிஷா வீட்டிலிருந்தபடியே செல் போனில் உரையாடுவதுபோல் காட்சி படமாக்கப்பட்டது. கவுதம் மேனன் தனது வீட்டிலிருந்தபடியே காட்சிகளை விளக்கினார். அதில் திரிஷாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்குத் தாய் ஆனது போலவும் ஆனால் சிம்பு இன்னமும் திரிஷாவை காதலிப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் கார்த்தியாகச் சிம்பு, ஜெஸ்ஸியாக திரிஷா நடித்திருந்தனர். பன்னிரண்டு நிமிடம் ஓடும் இந்த குறும்படம் யூடியூபில் கடந்த மே 20ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஒரு பக்கம் பாராட்டு வந்த நிலையில் இன்னொரு பக்கம் விமர்சனமும் வந்தது.

இது குறித்து கவுதம் மேனன் வெளியிட்ட மெசேஜில்,ஊரடங்கு நேரத்தில், ஒரு சோதனையான கட்டத்தில் இப்படம் உருவாவதற்கு பணியாற்றிய அனைவருக்கும் எனது நன்றி. எல்லோருக்கும் அன்பான, அழகான எதிர்காலம் அமையும் என்று நம்புகிறேன். எல்லோருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்: எனக் குறிப்பிட்டிருந்தார். சிம்புவும், திரிஷாவும் இந்த குறும்படத்தில் நடித்த போது மிகவும் நேர்த்தியாக நிஜமாகவே இருவரும் ஒருவர் மீது ஒருவர் காட்டிய அன்பாகவே பலரும் பார்த்தனர். இப்படத்துக்காக திரிஷாவுக்கு சிம்பு போன் செய்து பேசியதிலிருந்து இருவருக்கும் இடையே காதல் இருப்பதாகப் புகைச்சல் கிளம்பியது. திடீரென்று ஒருநாள் சிம்பு தனது வீட்டில் சமைப்பது போல் வீடியோ வெளியிட்டார். அதில் நடிகர் விடிவி கணேஷும் இடம் பெற்றார். அதில் இருவருக்கும் நடக்கும் உரையாடலில் தனது வரப்போகும் மனைவிக்குத் தான் எவ்வளவு மரியாதை தருவேன் என்பதைச் சிம்பு விளக்கி இருந்தார். பெண்டாட்டி என்றால் சமைத்துப் போடத்தான் வருகிறாரா?அவருக்கு நான் சமைத்துப் போடுவேன். பெண்டாட்டி என்பவர் கணவருக்கு அடிமையில்லை. அவர் விரும்பியதை அவர் செய்யலாம் என வரப்போகும் மனைவிக்கு தான் அன்பு கணவராக இருப்பேன் என்பதை வெளிப்படுத்தி இருந்தார். அந்த வீடியோவை பார்த்த பல பெண்கள் சிம்புவுக்கு வரப்போகும் மனைவி கொடுத்து வைத்தவராகத் தான் இருக்க வேண்டும் என்று சிம்புவை பாராட்டி கமெண்ட் பகிர்ந்தனர். முன்னதாக லண்டனைச் சேர்ந்த தமிழ் பெண்ணை சிம்பு மணக்கவுள்ளதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன் பரபரப்பு ஏற்பட்டது. அதனை மறுத்த சிம்புவின் தந்தை இ.ராஜேந்தர், என் மகன் சிம்புவுக்கு திருமணம் நிச்சயமானால் அதை நாங்களே முறைப்படி அறிவிப்போம் என்றார்.

இந்த நிலையில் தான் சிம்புவும் திரிஷாவும் காதலிக்கிறார்கள். அவர்கள் இருவரும் திருமணம் செய்யவிருப்பதாக தற்போது பலமாக கிசுகிசு கிளம்பி இருக்கிறது.
சிம்பு, திரிஷா இருவருமே ஒரு வகையில் காதல் தோல்வி அடைந்தவர்கள் தான். சிம்புவும் நயன்தாராவும் காதலித்தனர். ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் பிரேக் அப் ஆனது. அடுத்து சிம்புவும் ஹன்சிகா மோத்வானியும் காதலித்தனர் அதுவும் பிரேக் அப்பில் முடிந்தது. நயன்தாரா, ஹன்சிகாவுடன் காதல் முறிவு என்ற காலகட்டத்துக்கு பிறகும் நயன்தாராவுடன் இது நம்ம ஆளு படத்தில் நடித்த சிம்பு தற்போது மகா படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து நடித்து வருகிறார். காதல் முறிவு வேறு ,தொழில் வேறு என்பதை இந்த காலத்து இளவட்டங்கள் நன்றாகப் புரிந்து வைத்திருக்கின்றனர்.

நடிகை திரிஷாவும், பாகுபலி நடிகர் ராணாவும் காதலித்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் பிரிந்தனர். மேலும் திரிஷா, பட அதிபர் வருண் மணியன் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அந்த திருமணத்தை திரிஷா ரத்து செய்துவிட்டார். அன்று முதல் அவர் மீண்டும் சினிமாவில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். திரிஷா, சிம்பு திருமணம் செய்யவிருப்பதாக நெட்டில் கிசுகிசுக்கள் வெளிவந்தாலும் அது பற்றி இருதரப்பில் யாரும் உறுதி செய்யவில்லை.

You'r reading திரிஷாவை மணக்கிறார் சிம்பு? நெட்டில் தீயாய் பரவும் புதிய பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை