Monday, Oct 18, 2021

சூர்யாவின், சூரரைப்போற்று ஒடிடி தளத்தில் வெளியாகிறது..

Suraraippottru Release On Amezan Prime

by Chandru Aug 22, 2020, 15:33 PM IST
சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. இப்படத்தைச் சுதா கொங்கரா இயக்கி உள்ளார். படம் முடிந்து தியேட்டரில் வெளியிடத் தயாராக உள்ளது. ஆனால் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடி இருப்பதால் பல மாதங்களாக படம் வெளியிட முடியாத நிலை உள்ளது. இதனால் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் ஒடிடி தளத்தில் வெளி யானது. தற்போது சூர்யா நடித்திருக்கும் சூரரைப்போற்று படமும் ஒடிடியில் வெளியாகிறது.இதுகுறித்து நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


அனைவருக்கும்‌ வணக்கம்‌. இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையிலும்‌ ஒரு பூ, பூக்கத்தானே செய்கிறது' என்ற எழுத்தாளர்‌ பிரபஞ் சனின்‌ வார்த்தைகள்‌ நம்பிக்கையின்‌ ஊற்று. கண்ணுக்கு தெரியாத வைரஸ்‌, ஒட்டுமொத்த மனிதகுலத்தின்‌ செயல் பாட்டையும்‌ நிறுத்தி வைத்‌திருக்கும்‌ சூழலில்‌, பிரச்சினைகளில்‌ மூழ்கிவிடாமல்‌, நம்பிக்கையுடன்‌ எதிர்நீச்சல்‌ போடுவதே முக்கியம்‌.

இயக்குநர்‌ சுதா கொங்கரா அவர்களின்‌ பல ஆண்டுகால உழைப்பில்‌ உருவாகியுள்ள, 'சூரரைப்‌ போற்று திரைப் படம்‌ எனது திரைப்பயணத்தில்‌ மிகச் சிறந்த படமாக நிச்சயம்‌ இருக்கும்‌. மிகப்பெரிய வெற்றியை அளிக்கும்‌ என்றுநம்புகிற இத்‌திரைப்படத்தை, திரையரங்‌கங்களில்‌ அமர்ந்து என்‌ பேரன்பிற்குரிய சினிமா ரசிகர்களுடன்‌ கண்டுகளிக்கவே மனம்‌ ஆவல்‌ கொள்கிறது. ஆனால்‌, காலம்‌. தற்போது அதை அனுமதிக்க வில்லை. பல்துறை கலைஞர்களின்‌ கற்பனை சிறகினிலும்‌, கடுமையான உழைப்பிலும்‌ உருவாகும்‌ திரைப் படத்தைச்‌ சரியான நேரத்தில்‌ மக்களிடம்‌ கொண்டு சேர்ப்பது தயாரிப்பாளரின்‌ முக்கிய கடமை.
எனது 2டி எண்டர்டெயின்மெண்ட்‌ நிறுவனம்‌ இதுவரை எட்டு படங்களைத்‌ தயாரித்து வெளியீடு செய்‌திருக்கறது. மேலும்‌ பத்து படங்கள்‌ தயாரிப்பில்‌ உள்ளன. என்னைச்‌ சார்ந்திருக்கிற படைப்பாளிகள்‌ உட்படப் பலரின்‌ நலன்‌ கருதி முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. சோதனை மிகுந்த காலகட்டத்தில்‌, நடிகராக இல்லாமல்‌, தயாரிப்பாளராக முடிவெடுப்பதே சரியாக இருக்குமென நம்புகிறேன்‌..
'சூரரைப்‌ போற்று' திரைப்படத்தை, 'அமேசான்‌ ப்ரைம்‌ வீடியோ மூலம்‌ இணையம்‌ வழி வெளியிட முடிவு செய்திருக்கிறோம்‌. தயாரிப்பாளராக மனசாட்சியுடன்‌ எடுத்த இந்த முடிவை, திரையுலகைச் சார்ந்தவர்களும்‌, என்‌ திரைப்படங்களைத்‌ திரையரங்கங்களில்‌ காண விரும்புகிற பொதுமக்களும்‌, நற்பணி இயக்கத்தைச்‌ சேர்ந்த தம்பி, தங்கைகள்‌ உள்ளிட்ட அனைவரும்‌ புரிந்துகொள்ள வேண்டுமென அன்புடன்‌கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

உங்கள்‌ அனைவரின்‌ மனங்கவர்ந்த திரைப்படமாக 'சூரரைப்‌ போற்று' நிச்சயம்‌ அமையும்‌. மக்கள்‌ மகிழ்ச்சியோடு திரையரங்கம்‌ வந்து படம்‌ பார்க்கும்‌ இயல்புநிலை திரும்புவதற்குள்‌, கடினமாக உழைத்து, ஒன்றுக்கு இரண்டு படங்களில்‌ நடித்து திரையரங்கில்‌ ரிலீஸ்‌ செய்துவிட முடியு மெனநம்புகிறேன்‌. அதற்கான முயற்சிகளைத்‌ தீவிரமாக மேற்கொண்டு வருகிறேன்‌... இருப்பதை அனைவருடன்‌ பகிர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்வு. இந்த எண்ணத்தை இன்றளவும்‌ செயல் படுத்தியும்‌ வருகிறேன்‌. 'சூரரைப்‌ போற்று: திரைப்பட வெளியீட்டுத் தொகையில்‌ இருந்து தேவையுள்ளவர்களுக்கு, 'ஐந்து கோடி ரூபாகிர்ந்தளிக்க முடிவு செய்‌திருக்கிறேன்‌. பொதுமக்களுக்கும்‌, திரையுலகை சார்ந்தவர்களுக்கும்‌, தன்னலம்‌ பாராமல்‌ 'கொரானா யுத்த களத்தில் முன்னின்று பணியாற்றியவர்களுக்கும்‌, இந்த ஐந்து கோடி ரூபாய்‌ பகிர்ந்தளிக்கப்படும்‌. உரியவர்களிடம்‌ ஆலோசனை செய்து அதற்கான விவரங்கள்‌ விரைவில்‌ அறிவிக்கப்படும்‌. உங்கள்‌ அனைவரின்‌ அன்பும்‌, ஆதரவும்‌, வாழ்த்தும்‌ தொடர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்‌. இந்த நெருக்கடி சூழலை மன உறுதியுடன்‌ எதிர்த்து மீண்டு எழுவோம்‌. நன்றி .இவ்வாறு சூர்யா தெரிவித்திருக்கிறார்.

You'r reading சூர்யாவின், சூரரைப்போற்று ஒடிடி தளத்தில் வெளியாகிறது.. Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Cinema News