போதை மருந்து விவகாரத்தில் பிரபல நடிகை அதிரடி கைதால் பரபரப்பு..!

Nimirnthu Nil Actress Ragini Dwivedi Arrest On Drug Racket case?

by Chandru, Sep 4, 2020, 14:04 PM IST

சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்தபடம் நிமிர்ந்து நில். இதில் அமலா பால் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்தில் ஜெயம் ரவி, நரசிம்ம ரெட்டி என்ற மற்றொரு கதாபாத்திரத்திலும் நெகடிவ் வேடத்திலும் நடித்திருந்தார். அந்த பாத்திரத்துக்கு ஜோடியாக நடித்தவர் ராகினி திவேதி. முன்னதாக அஞ்சான் படத்திலும் இவர் நடித்திருக்கிறார். கன்னட நடிகையான ராகினி கன்னடத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார். அவர் தற்போது போதோ பொருள் விவகாரத்தில் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சில தினங்களுக்கு முன் பெங்களூரில் டிவி நடிகை அனிகா உள்ளிட்ட சிலரை போதை பொருள் விற்றதாக குற்றப்பிரிவு போலீசர் கைது செய்தார்.

இதில் கைதான ரவி என்ற நபர் நடிகை ராகினியின் நண்பர். அவரிடம் போலீஸார் விசாரித்த போது ராகினி திவேதி தொடர்பு பற்றி தெரிவித்தார். அதைக் கேட்டு ஷாக் ஆன போலீசார் ராகினியிடம் விசாரனை நடத்த சம்மன் அனுப்பினர். குற்றப்பிரிவு (சிசிபி) போலீஸார் விசாராணைக்கு ராகினி திவேதி நேரில் ஆஜரானார். அவரிடம் போதைப்பொருள் மோசடியில் தொடர்பு பற்றி விசாரிக்க முடிவை செய்துள்ளனர். அப்போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளிவரும் என்று தெரிகிறது. இந்நிலை யில் ராகினி திவேதியை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது.


கன்னட திரையுலகில் கலைஞர்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்து வரும் சிலரை கடந்த மாதம் இறுதியில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணி யகம் (என்சிபி) கைது செய்தது.பிடிப் பட்டவர்களில் மற்றொருவரிடமிருந்து டைரி சிக்கியது. அதில் உள்ள குறிப்பை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதில் பல்வேறு பிரபலங்கள் மற்றும் மாடல் களின் பெயர்கள் உள்ளன.


இந்த்த விவகாரம் தொடர்பாக கன்னட பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் கூறும்போது, யாரெல்லாம் போதை மருந்து பயன்படுத்துகிறார்கள் என்பது எனக்கு தெரியும் என்று கூறியதுடன் தகுந்த ஆவணங்களையும் பெயர் பட்டியலையும் போலீஸாரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து குற்றப்பிரிவு இணை ஆணையர் சந்தீப் பாட்டீல் கூறுகையில், "நாங்கள் இந்திரஜித்தை மீண்டும் அழைத்து கூடுதல் ஆதாரங்கள் அல்லது ஆவணைங்களை அளிக்க கேட்போம் என்றார்.


இந்நிலையில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூடி பேசியது. அப்போது. கன்னட திரையுலகில் போதை பயன்பாடு இல்லை. குற்றவாளிகள் என நிரூபிக்கப் பட்ட நடிகர்கள் மீது திரைப்பட வர்த்தக அமைப்பு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தது.
மேலும் திரைப்பட தயாரிப்பாளரின் சங்க தலைவர் ஜெயராஜ் கூறும்போது, எந்தவொரு தயாரிப்பாளரும் போதை பொருள் மோசடியில் ஈடுபடும் நடிகர் களை படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ய மாட்டோம். ஆனால் நடிகர்கள் போதைப் பொருள் உட்கொள்வது குறித்து எங்களி டம் எந்த தகவலும் இல்லை. போலீசார் அதை விசாரிப்பார்கள் என்றார்.

You'r reading போதை மருந்து விவகாரத்தில் பிரபல நடிகை அதிரடி கைதால் பரபரப்பு..! Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை