சீ யூ சூனுக்கு திரிஷா பாராட்டு

by Nishanth, Sep 7, 2020, 20:28 PM IST

இதுவரை இந்தியாவில் யாருமே முயற்சிக்காத வகையில் ஒரு சினிமா மலையாளத்தில் எடுக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஐபோனை பயன்படுத்தி படம்பிடிக்கப்பட்ட 'சீ யூ சூன்' என்ற இந்தப் படம் கடந்த 1ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. தற்போது அமேசான் பிரைமில் இந்தப் படம் தான் டாப் லிஸ்டில் உள்ளது. மகேஷ் நாராயணன் இயக்கிய இந்த படத்தில் மலையாளத்தின் முன்னணி நடிகரான பகத் பாசில், ரோஷன் மேத்யூ, தர்சனா ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை வைத்தே இந்தப் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி உள்ளனர்.

கொரோனா காலத்தில்தான் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. புதிய சினிமாவுக்கான படப்பிடிப்பை தொடங்கக் கூடாது என்ற மலையாள சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தினரின் எச்சரிகையையும் மீறி பகத் பாசில் படத்தை எடுத்து முடித்தார். பகத்தும், அவரது மனைவி நஸ்ரியாவும் சேர்ந்து தான் இந்த படத்தை தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதுமையான இந்தப் படத்திற்கு பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன. பிரபல நடிகை திரிஷாவும் இந்தப் படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். '2020ன் சிறந்த திரைப்படம் 'சீ யூ சூன்'. என்னுடைய கேரள வேர்களை எண்ணி நான் பெருமை கொள்கிறேன்' என்று அவர் தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார். திரிஷா கேரள மாநிலம் பாலக்காட்டில் தான் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


More Cinema News

அதிகம் படித்தவை