Tuesday, Nov 30, 2021

இசைப்புயல் கொண்டாடும் எஸ்பிபி.. அவரைபோல் பன்முக சாதனையாளரை பார்த்ததில்லை..

AR.Rahaman Shares Experience with Versatile Singer SPB

by Chandru Sep 27, 2020, 11:59 AM IST

பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் உடல் நல குறைவால் 74வது வயதில் நேற்று முன் தினம் இறந்தார். அவரது மறைவு குறித்து தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் மனம் திறந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் கூறியதாவது:
நான் பெரிய அளவில் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி என்றால் அது எஸ்.பி.பி யின் பிறந்த நாளைக் கொண்டாடிய நிகழ்வு தான். மியூசிக் அகாடமியில் 1982 களில் நடந்தது சுஹாசினி மணிரத்னம் தொகுப்பாளராக இருந்து நடத்தினார். எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. இது என் வாழ்க்கையில் மிக உயர்ந்த நிகழ்ச்சியாகும். இப்படித்தான் என் வாழ்க்கை அந்த வழியில் தொடங்கியது.


நான் மற்ற இசையமைப்பாளர்களுக்காக, ஒரு கீபோர்ட் பிளேயாராக வாசிப்பேன். எஸ்பிபிக்காக பல பாடல்களுக்கு வாசித்திருக்கிறேன். அவர் ஒரு பாடலை 15 நிமிடங்களில் கற்றுக் கொள்வார், 10 நிமிடங்களில் பாடி முடித்துவிட்டு அடுத்த பாடல் பதிவுக்கு செல்வார். இப்படியொரு பாடகரை நான் இதுவரை பார்த்ததில்லை - மிக விரைவாக, தொழில் முறை நேர்த்தியுடன் மிகவும் அவரது செயல் இருக்கும்.
எனது முதல் படம் ரோஜாவில் எஸ்பிபி பாடிய காதல் ரோஜாவே.. பாடலை பதிவு செய்தபோது அவருடனான எனது மற்ற நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளது. அவர் ஸ்டுடியோவுக்குள் வந்து, இந்த ஸ்டுடியோ எப்படி சினிமா இசையை உருவாக்க முடியும்? என்றார். நான் அவரைப் பார்த்து சிரித்தேன். படம் வெளியானதும் அவர் திரும்பி வந்து, 'நீங்கள் நிரூபித்து விட்டீர்கள், இசையை எங்கும் தயாரிக்க முடியும் அதை நீங்கள் செய்கிறீர்கள் என் வாழ்த்து தெரிவித்தார். அவர் எனது பயண திட்டங்களின் ஒரு பகுதியாக இருந்தார், அவர் அமெரிக்காவிற்கும், பல்வேறு நகரங்களுக்கும் வந்துள்ளார். அந்த அற்புதமான தருணங்களையும், எஸ்பிபியிடமிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்களையும் நினைவில் வைத்துக் கொள்வதுதான். அவரின் பெருந்தன்மை. இசையை அவர் நேசிக்கும்விதம் போன்றவற்றை அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். அவர் ஒருபோதும் எதுவும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்.


நடிக்கச் சொன்னால் நடிப்பார். அவர் இசை அமைப்பாளாராக இருப்பார் எல்லாவற்றுக்கும் மேலாக பாடகர். ஒவ்வொரு ஹீரோவுக்காக அவர் பாடும் போது அந்த ஆளுமையை கொண்டுவந்து நிறுத்துவார். வேறு எந்தவொரு பாடகரும் அவரைப் போலவே பல்கலைவித்தகராக இருந்து நான் பார்த்ததில்லை. இசையிலேயே தன் முழு வாழ்க்கையையும் வாழ்ந்தார். அதுவும் அன்புடனும் பண்புடனும். எஸ்பிபி எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர். எஸ்பிபி சார் உங்களை ரொம்பவே மிஸ் செய்கிறோம்.
எஸ்பிபியும் அவரது குரலும் தென்னிந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். நமது வெற்றிகள், அன்பு, பக்தி மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றின் ஒரு பகுதியாகும். அவருடைய இசைய, வாழ்க்கையை நாம் கொண்டாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவரை நாம் இழந்தி விட்டோம் நடந்தது நடந்துவிட்டது. ஆனால் அவரை நாம் கொண்ட்டாட வேண்டும்
நம் அனைவரிடமும் நான் கேட்கக் கூடியது இதுதான். ஒருவருக்கொருவர் கருணை காட்ட முயற்சியுங்கள், இருக் கும்போது ஒருவரை மதிக்க வேண்டும், உங்கள் பெற்றோர், உங்கள் மூத்த கலை ஞர்கள் அல்லது நிபந்தனையின்றி உங்களுக்கு கொடுக்கும் நபர்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக.
இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருக்கிறார்.
இசைமைப்பாளர் ஏ.ஆ.ரஹ்மான், பாடகர் எஸ்பிபி மறைவுகுறித்து வெளியிட்ட டிவிட்டர் மெசேஜில். எஸ்பிபி மறைவு ஒரு பேரழிவு என்று கூறி இரங்கல் தெரிவித்திருந்தார்.

You'r reading இசைப்புயல் கொண்டாடும் எஸ்பிபி.. அவரைபோல் பன்முக சாதனையாளரை பார்த்ததில்லை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News