ரஜினி போட்டது அரோகாரா இயக்குனர் போட்டது சிவ சிவா..

by Chandru, Nov 15, 2020, 15:30 PM IST

இரண்டு மாதங்களுக்கு முன் கந்த சஷ்டி கவசத்தை ஒரு அமைப்பு விமர்சித்து வீடியோ வெளியிட்டது அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம் பியது. திரையுலகினரும் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் கந்தனுக்கு அரோகாரா என்ற சரண கோஷத்தை ஹேஷ்டேக்காக பதிவு செய்தார். அது ட்ரெண்டானது. தற்போது தற்போது பதிய படங்களை இயக்கி இருக்கும் இயக்குனர் ஒருவர் எல்லாம் சிவமயம் ஆக்கி இருக்கிரார். சிவ சிவா கோஷத்தை டைட்டிலாக வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுசீந்திரன் இயக்க சிம்பு நடிக்கும் புதிய திண்டுக்கல்லில் 40 நாட்கள் ஷூட்டிங் நடந்து முடிந்தது. இப்படததிற்கு யாரும் எதிர்பாராத வகையில் ஈஸ்வரன் என பெயரிடப்பட்டது. திடீரென்று சிவன் பெயருடன் டைட்டில் என்றதும் அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இதில் முக்கிய வேடத்தில் பாரதிராஜா நடிக்கிறார். நிதி அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார். மற்றொரு ஹீரோயினாக நந்திதா ஸ்வேதா நடிக்கிறார். தமன் இசை அமைக்கிறார். இப்படத்தின் டீசர் தீபாவளி தனத்தில் அதிகாலை வெளியிடப்பட்டது. வரும் பொங்கல் தினத்தில் படம் திரைக்கு வருகிறது.

சுசீந்திரன் கோவிட்19 ஊரடங்கு காலகட்டத்தில் மற்றொரு படத்தையும் இயக்கி முடித்துள்ளார். நான் மகான் அல்ல பாணியில் இதுவொரு ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கிறது. அப்பா வியாக பல பல படங்களில் நடித்த ஜெய் இதில் ஹீரோவாக நடித்துள்ளார். முதல் பாதியில் இதிலும் அப்பாவியாக வந்தாலும் இரண்டாம் பாதியில் அவர் ஆக்‌ஷன் அவதாரம் எடுக்க உள்ளார்.

இந்த படத்தின் டைட்டிலை இயக்குனர் வெங்கட் பிரபு ட்விட்டரில் வெளியிட்டார். படத்துக்கு, சிவ சிவா என்று டைட்டில் வைத்துள்ளனர். இதில் மீனாட்சி கோவிந்த ராஜன் ஹீரோயினாக நடிக்கிறார்.

சத்ரு, சரத், ஜே.பி., காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார், அர்ஜெய் பிரின்ஸ், அருள்தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் இசையமைப் பாளராகவும் நடிகர் ஜெய் அறிமுகமாகிறார். வைரமுத்து, யுகபாரதி, ஏகாதசி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை லெண்டி ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.ஐஸ்வர்யா தயாரித்துள்ளார்.

வெண்ணிலா கபடி குழு. அழகர் சாமி குதிரை என்று மாறுபட்ட டைடில்களாக வைத்து வந்த சுசீந்திரன் திடீரென்று ஈஸ்வரன், சிவ சிவா என அதிரடியாக பெயரிட்டு அசத்தி இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்களும் இரண்டு பட டைட்டிலும் சிவ மயமாக இருக்கிறதே என்ன ஸ்பெஷல் என்று கேட்டு வருகின்றனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை