Saturday, Oct 16, 2021

லிங்குசாமி இயக்கும் இருமொழி படத்தில் சீனியர் நடிகை..

by Chandru Feb 24, 2021, 09:41 AM IST

சாமி, சண்ட கோழி, ரன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கி அளித்த இயக்குனர் லிங்குசாமி ஏறக்குறைய மூன்று வருட இடை வெளிக்கு பிறகு மீண்டும் பதியப் படம் இயக்குகிறார். இது தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிறது. கடைசியாகக் கடந்த 2018ம் ஆண்டு சண்ட கோழி படத்தை லிங்குசாமி இயக்கினார். தற்போது தமிழ், தெலுங்கில் அவர் இயக்கும் படத்தில் பிரபல டோலிவுட் நடிகர் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கிறார். கடந்த வாரம் ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த படத்தின் பூஜையின் படங்களை லிங்குசாமி பகிர்ந்தார்.

இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் நடிகை தேர்வு நடந்து வந்தது. தெலுங்கில் வெளியான உபேனா படத்தில் நடித்திருக்கும் கிருதிஷெட்டி ஹீரோயினாக படத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதில் சீனியர் நடிகை நடிகை நதியா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல் வருகிறது.முன்னதாக இயக்குனர் லிங்குசாமியும் நடிகர் ராம் இருவரும் இணைவது பற்றி சில மாதங்களாக பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர்.

சமீபத்தில் புதியபட அறிவிப்பை வெளியிடவும் அதற்கான வேலைகளைத் தொடங்கவும் முடிவு செய்தனர்.ஹீரோயின் வேடத்துக்கு நடிகையைத் தேடியபோது தெலுங்கில் பிஸியான நடிகையாக உலாவரும் கிருதி ஷெட்டியை அணுகினர். அவர் கதை கேட்டு தனது பாத்திரம் வலுவாக இருப்பதை உணர்ந்து நடிக்க ஒப்புக் கொண்டார். இப்படம் மூலம் கிருதி தமிழிலும் அறிமுகமாகவிருக்கிறார்.தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கப் பேச்சு நடக்கிறது. லிங்குசாமி சமீபத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் ஒரு சந்திப்பு நடத்தினார். இருவரும் சுமூகமாக பேசி உள்ளனர்.

எனவே இருவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைவது இதுவே முதல் முறை.இப்படத்தின் படப் பிடிப்பு மே மாதத்தில் தொடங்க உள்ளது. இது தமிழ் மற்றும் தெலுங்கில் ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் ஒரே நேரத்தில் படமாக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

You'r reading லிங்குசாமி இயக்கும் இருமொழி படத்தில் சீனியர் நடிகை.. Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Cinema News