Saturday, Oct 16, 2021

இவர் கையால் தான் கார் வாங்குவேன் – சொல்லியதை செய்து முடித்த மாஸ்டர் மகேந்திரன்!

by Madhavan Apr 9, 2021, 18:15 PM IST

மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கையால் தான் காரை வாங்குவேன், என்று அடம்பிடித்து அதனை சாதித்திருக்கிறார் நடிகர் மகேந்திரன்.

மாஸ்டர் மகேந்திரன்.. இந்த பெயர் அண்மையில் நமக்கு நன்கு அறிமுகமாயிருக்கும். மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் வேற லெவலில் நடித்து அசத்தியிருப்பார். மின்சார கனவு படத்தில் சிறுவன் வேடத்தில் வந்த பையனா இது? என்று நம்மா வாய் பிளக்க வைக்கும் அளவுக்கு அவரது நடிப்பு இருக்கும்.

உண்மையில் மாஸ்டர் படம் அவருக்கு ஒரு புதிய உச்சத்தை எட்டிக்கொடுத்தது. சிறுவனாக பல படங்களில் நடித்தவர் இப்போது தாடியும், மீசையுமாக வளர்ந்த நடிகராகிவிட்டார். மாஸ்டர் படத்தில் இளவயது விஜய் சேதுபதியாக நடித்தது மகேந்திரனுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. பல புதிய படங்கள் மகேந்திரனை தேடி வந்துள்ளன.

இந்நிலையில், புதிதாக கார் வாங்கினார் மகேந்திரன். "நூற்றுக்குமேல் படங்களில் நடித்திருந்தாலும், நடிகனாக என்னை அடையாளம் காட்டியதும், அங்கீகாரம் தந்ததும் மாஸ்டர் திரைப்படம்தான். அதனால், நான் வாங்கும் காரை மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கையால் வாங்குவது என்று முடிவு செய்தேன்" என்கிறார் மகேந்திரன்.

அவர் விரும்பியது போல் லோகேஷ் கனகராஜ், கையால் கார் சாவியை பெற்றுக் கொண்டார். இந்த மகிழ்ச்சியை ட்விட்டரில் அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தன்னுடைய இயக்குநருக்கு உரிய மரியாதை கொடுத்து, நன்றி மறக்காமலிருக்கும் மகேந்திரனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

You'r reading இவர் கையால் தான் கார் வாங்குவேன் – சொல்லியதை செய்து முடித்த மாஸ்டர் மகேந்திரன்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News