Sunday, Dec 5, 2021

ஷங்கர் - ராம்சரண் இணையும் படம்.. வெளியான முக்கிய அப்டேட்!

by Sasitharan Apr 19, 2021, 21:17 PM IST

கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கும் படம் இந்தியன்2, லைகா புரடக்‌ஷன் தயாரிக்கிறது, இப்படத்தின் தொடக்கத்திலிருந்தே தயாரிப்பு நிறுவனத்துக்கும் இயக்குனர் ஷங்கருக்கும் பட்ஜெட் விஷயத்தில் பிரச்சனை இருந்து வந்தது, சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் பட்ஜெட்டை குறைத்தால் தான் ஷூட்டிங் தொடர முடியும் என்று பட நிறுவனம் நிபந்தனை விதித்தது.

பேச்சு வார்த்தைக்குப் பிறகு பட்ஜெட்டை குறைத்தார் ஷங்கர். அதன்பின் ஷூட்டிங் நடந்த நிலையில் திடீர் விபத்து ஏற்பட்டது. படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்து உயிர்ப்பலி ஏற்பட்டது. இதன்பின் தயாரிப்பு நிறுவன பிரச்னை மீண்டும் எழ படம் நிறுத்தப்பட்டது. இதனால் கமல் விக்ரம் படத்தில் நடிப்பதில் பிஸியாக, ஷங்கர் ராம்சரண் இணையப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் ஹீரோயின் மற்றும் இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, இந்தப் படத்தில் முதல்வன் அர்ஜுன் போல் இளம் முதல்வராக ராம் சரண் கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், அதில் நிருபர் ஒருவரை ராம் சரண் காதலிப்பது போலவும் கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கேரக்டருக்கு பொருத்தமாக தற்போது நாயகியாக நடிக்க ராஷ்மிகா பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையே, படத்தின் ராம் சரணின் தந்தை மெகா ஸ்டார் சிரஞ்சீவி கேமியோ ரோலில் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இசையமைப்பாளராக தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணியில் இருக்கும் தமன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறாராம். சமீபத்தில் இவரின் இசையமைப்பில் பவன் கல்யாணின் வக்கீல் சாப் படம்வெளியானது . இதில் பவன் கல்யாணின் பில்டப் பிஜிஎம் ஒட்டு மொத்த திரையுலகினரின் பாராட்டையும் தமனுக்கு பெற்றுக்கொடுத்தது. இதனால் அவரை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறுகிறார்கள்.

You'r reading ஷங்கர் - ராம்சரண் இணையும் படம்.. வெளியான முக்கிய அப்டேட்! Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Cinema News