Advertisement

இயக்குநர் சங்கருக்கு திருடும் புணர்ச்சி சுகம்தான் முக்கியம் - எழுத்தாளர் ஆர்னிகா நாசர் காட்டம்.

எந்திரன் படத்தில் கதை திருட்டுக்காக இயக்குநர் சங்கரின் 10 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், பிரபல எழுத்தாளர் ஆர்னிகா நாசர் இயக்குநர் சங்கர் , எழுத்தாளர் தமிழ்நாடான் பற்றி பேஸ்புக்கில் கடுமையாக தாக்கி பதிவிட்டுள்ளார். அதில், கூறியிருப்பதாவது

'மாலைமதியில் நான் எழுதிய -'ரோபாட்தொழிற்சாலை' நாவலைதான் அறிவு திருடர் ஷங்கர் திருடி படமெடுத்தார்.என் நாவலை காப்பி பண்ணி தான் ஆரூர் தமிழ்நாடன் ஒரு பக்க சிறுகதை எழுதினார்.அந்த ஒரு பக்க சிறுகதைக்கு முன்னும் பின்னும் தமிழ்நாடன் விஞ்ஞான சிறுகதைகளே எழுதவில்லை.விஞ்ஞான கதைகள் எழுத exclusive and unique scientific attitude தேவை. என் நாவல் தமிழ் நாடன் கதைக்கு பல வருடங்கள் மூத்தது. Robotics பற்றி ஷங்கருக்கும் தமிழ் நாடனுக்கும் ஒரு துளி அறிவு கிடையாது. தமிழ்நாடனுக்கு நக்கீரனின் ஆஸ்தான வக்கீல் பெருமாள் கிடைத்தார். நானும் அவரிடம் போக என் வழக்கை ஜுனியர்களிடம் தள்ளிவிட்டார். அவர்கள் வழக்கை வர்கீஸ் என்கிற வக்கீலுக்கு ஒதுக்கி விட்டனர்.வர்கீஸ் திறமையான வக்கீல் தான். அவருக்கு என்னென்ன வேகத்தடைகளோ? இன்னும் என் வழக்கு நடந்து வருகிறது. மொத்தத்தில் ஷங்கரும் ஆரூர் தமிழ்நாடனும் இரட்டை அறிவு திருடர்கள்.

எது எப்படியோ ஷங்கருக்கு ஆணி அடிக்கப்பட்டது வலியுடன் கூடிய மகிழ்ச்சி. ஆரூர் தமிழ்நாடன் நக்கீரன் குரூப் பத்திரிகையில் இணையாசிரியர் பொறுப்பில் இருப்பது அவருக்கு கூடுதல் பலம். Robotics பற்றி என் குருநாதர் சுஜாதாவை விட ஒரு படி மேலே போய் முப்பதுக்கும் மேற்பட்ட ரோபோ கதைகள் எழுதி உள்ளேன். ஒரு ரோபோ கதையில் ரோபோ செக்ஸ் வைத்து கொண்டு குழந்தை பெறும். என்னுடைய ரோபோ கற்பனைகள் ஹாலிவுட்டை விட அட்வான்ஸானது. உண்மை பலருக்கு கசக்கும்.என் இதயத்தில் சொட்டும் குருதிக்கு ஷங்கரும் தமிழ்நாடனும் பதில் சொல்ல வைப்பான் இறைவன்.நான் pseudo-science fiction கதைகளுக்கு முன்னத்தி ஏர். எந்திரன் கதையை சுஜாதா கொடுத்திருப்பார்.ஷங்கர் ஹாலிவுட் படங்களிலிருந்து திருடி இருப்பார் என்பது சொத்தை வாதம். திருடன் வெளியூர் போய் தான் திருடுவான் என்றில்லை நல்ல பொருள் கிடைத்தால் பக்கத்து வீட்டிலும் திருடுவான். அவனுக்கு திருடும் புணர்ச்சி சுகமே முக்கியம். விஞ்ஞான கதைகள் என்றால் total credit ஐயும் சுஜாதாவுக்கு தருவது நியாயமல்ல.கணிதத்தில் கூட நான் சயின்ஸ் பிக்ஷன் எழுதியிருக்கிறேன்.'

இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
29-years-of-marriage-no-children-but-this-is-the-ideal-couple-says-malayalam-director
திருமணம் முடிந்து 29 ஆண்டுகள், குழந்தை இல்லை... ஆனால், இவர்கள்தான் ஆதர்ஷ தம்பதி - மலையாள இயக்குநர் சொல்கிறார்
for-director-shankar-the-pleasure-of-stealing-is-what-matters-writer-arnika-nassar-kattam
இயக்குநர் சங்கருக்கு திருடும் புணர்ச்சி சுகம்தான் முக்கியம் - எழுத்தாளர் ஆர்னிகா நாசர் காட்டம்.
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!