Advertisement

திருமணம் முடிந்து 29 ஆண்டுகள், குழந்தை இல்லை... ஆனால், இவர்கள்தான் ஆதர்ஷ தம்பதி - மலையாள இயக்குநர் சொல்கிறார்

நடிகை நிரோஷாவும் ராம்கியும் தமிழ் சினிமாவில் நல்ல தம்பதிகளாக பார்க்கப்படுகின்றனர். காதலித்து திருமணம் செய்த எத்தனையோ நடிகர் நடிகைகள் பிரிந்து போனாலும், இந்த தம்பிதியினர் மட்டும் திருமண வாழ்க்கையில் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தற்போது, மலையாள இயக்குநல் ஆலப்புழை அஷ்ரப், இவர்கள் இருவருக்கும் காதல் உருவான கதையை யூடியூப் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது, ' நடிகை நிரோஷா 1988 ஆம் ஆண்டில் மலையாள படமான ஒரு முத்தாசி கதாவில் நடித்திருந்தார். டைரக்டர் பிரியதர்ஷன் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த சமயத்தில் இயக்குநர் மணிரத்னம் தனது அக்னி நட்சத்திரம் படத்துக்கு மலையாள நடிகை லிசியை ஒப்பந்தம் செய்திருந்தார். இந்த படத்தில் பிகினி உடை அணிந்து ஒரு பாட்டில் நடிக்க வேண்டியது இருந்தது. இதனால், இந்த படத்தில் லிசி நடிக்க மறுத்துவிட்டார். தொடர்ந்து, பிரியதர்ஷன்தான் மணி ரத்னத்திடம் நிரோஷா பற்றி கூறினார். அதன்பிறகு, அவரை மணி ரத்னம் ஒப்பந்தம் செய்தார். அக்னிநட்சத்திரம் படத்தில் பிகினி உடை அணிந்து நிரோஷா நடித்த ஒரு பூங்காவனம் பாடல் செம ஹிட் அடித்தது. பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் கூட, இந்த பாட்டை பல முறை கேட்டுள்ளதாக ஒரு பேட்டியில் கூறினார். அடுத்து நடிகர் கமல்ஹாசனுடன் சூரசம்ஹாரம் படத்தில் நிரோஷா நடித்தார்.

இப்படித்தான், நிரோஷா தமிழில் பிரபல நடிகையாக மாறினார். பின்னர், செந்துரப்பூவே படம் நிரோஷாவுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இந்த படத்தில் முதன்முறையாக ராம்கியுடன் ஜோடி சேர்ந்து அவர் நடித்தார். அப்போது, முதலில் இருவருக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. தேவையில்லாமல் என்னை தொடக் கூடாது என்று நிரோஷா ராம்கியை அடிக்கடி கண்டித்தார். கமல்ஹாசன் கூட அனுமதி கேட்டுதான் நடிகைகளை தொடுவார் என்றெல்லாம் ராம்கியிடம் நிரோஷா கூறியுள்ளார்.இதனால், இருவருக்கும் முட்டி மோதிக் கொண்டிருந்தது. செந்துரப்பூவே படபிடிப்பின் போது, ரயிலில் இருரையும் வைத்து காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்த போது, நிரோஷா ரயிலில் இருந்து கீழே விழும் ஆபத்தில் இருந்தார்.

அப்போது, ராம்கி தன் பலத்தை எல்லாம் திரட்டி நிரோஷாவை ரயில் பெட்டிக்குள்ளே இழுத்து போட்டார். நிரோஷா மயக்கம் அடைந்து விட்டார். இந்த சமயத்தில் நிரோஷாவை ராம்கி குழந்தை போல பார்த்துக் கொண்டார். அப்போதுதான், முதன் முறையாக ராம்கி மீது நிரோஷாவுக்கு நல்ல அபிப்ராயம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அதுவே காதலாகி திருமணத்தில் முடிந்தது. அவர்களுக்கு திருமணம் முடிந்து 29 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், குழந்தை இல்லை . ஒருவரை ஒருவர் குழந்தையாக கருதிக் கொண்டு வாழ்க்கையை ஹேப்பியாக வாழ்ந்து வருகின்றனர். இதுதான் உண்மையான காதல்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
29-years-of-marriage-no-children-but-this-is-the-ideal-couple-says-malayalam-director
திருமணம் முடிந்து 29 ஆண்டுகள், குழந்தை இல்லை... ஆனால், இவர்கள்தான் ஆதர்ஷ தம்பதி - மலையாள இயக்குநர் சொல்கிறார்
for-director-shankar-the-pleasure-of-stealing-is-what-matters-writer-arnika-nassar-kattam
இயக்குநர் சங்கருக்கு திருடும் புணர்ச்சி சுகம்தான் முக்கியம் - எழுத்தாளர் ஆர்னிகா நாசர் காட்டம்.
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!