தொடரும் படம் வெற்றி : செங்கோட்டை முருகன் கோவிலுக்கு மோகன்லால் தங்க வேல் காணிக்கை

Success-of-the-film-Mohanlal-offers-a-golden-vel-to-the-Sengottai-Murugan-temple

நடிகர் மோகன்லால் நடித்து வெளியான தொடரும் மலையாள படம் வெற்றி பெற்றது. கேரளாவில் மட்டும் இந்த படம் 100 கோடியை வசூலித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் மோகன்லால் முருக பக்தராக நடித்துள்ளார். இதையடுத்து, தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலுள்ள திருமலை குமாரசாமி கோவிலுக்கு இன்று( மே 30 ) மோகன்லால் வந்தார். பின்னர், முருககடவுளை வழிபட்டார். தொடர்ந்து, கோவிலுக்கு தங்க காணிக்கையை வழங்கினார். இந்த படத்தில் நடிகை மோகன்லாலுடன் சேர்ந்து ஷோபனாவும் நடித்துள்ளார். இருவரும் சேர்ந்த 19 ஆண்டுகளுக்கு பிறகு நடித்த படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. மோகன்லாலின் 360வது படம் இது. ஷோபனாவுடன் சேர்ந்து நடித்த 56வது படம்.