தக் லைப் என்றால் என்ன? கர்நாடகத்தில் கமல்ஹாசனுக்கு கஷ்டம்தான்!

What-does-Tak-Life-mean-Kamal-Haasan-is-having-a-hard-time-in-Karnataka

யார் ஒருவன் பூஜ்யத்தில் தொடங்கி, தன்னை ஏதோவொன்றாக வளர்த்துக் கொள்கிறானோ அவனே 'தக்' என்கிறார்கள். இழப்பதற்கு எதுவுமில்லாத, எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் வாழ்வை 'தக் வாழ்க்கை' என்று கூறப்படுகிறது. இந்தியாவில் ஆங்கிலேயர்களை விரட்டி விரட்டி ஓட விட்டவர்கள் தாக்குகள். 1800 களின் ஆரம்பத்தில், இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான மக்களை வெகு சாதாரணமாக கழுத்தை நெரித்து கொன்று, உடமைகளை கொள்ளையடித்த கும்பல் இருந்தது . இவர்கள் தக்குகள் எனவும் 'பிண்டாரிகள்' எனவும் ஆங்கில அரசின் ஆவணங்கள் குறித்து வைத்துள்ளன. கொலை சம்பவத்தை பரம்பரை தொழில்முறையாகவே கொண்டவர்களின் வாழ்கை, 'தக்' என சொல்லப்படுகிறது.

தக் லைப் என்ற பெயரில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சர்ச்சையை சந்தித்துள்ளது. இந்த படத்தின் புரமோஷன் விழாவில் கமல்ஹாசன் தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என்று பேசி வைத்தார். இதையடுத்து, கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.மன்னிப்பு கேட்க வேண்டுமென கர்நாடகாவில் பல அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. ஆனால், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். தொடர்ந்து , கர்நாடகத்தில் தக் லைப் படம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தக் லைப் படத்தின் இணை தயாரிப்பாளரான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தக்லைப் படம் வெளியிட பாதுகாப்பு அளிக்க வேண்டுமென மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், கர்நாடக பிலிம் சேம்பர் தலைவர் நரசிம்மலு கூறுகையில், 'இது சினிமா தொடர்பான பிரச்னை இல்லை. எங்கள் மக்களின் பெருமை மற்றும் மொழியின் அடையாளத்துக்கு வந்துள்ள பிரச்னை.கர்நாடக மக்கள் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டுமென்பதில் உறுதியாகவுள்ளனர். நாங்கள் சட்டவிரோதமாக எதுவும் செய்துவிடவில்லை. கமல்ஹாசன் தாராளமாக நீதிமன்ற படி ஏறலாம். இங்கு தக் லைப் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் ' என்று தெரிவித்துள்ளார்.