கோவையைச்சேர்ந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் திரைப்படம் உருவாகிறது. இந்த திரைப்படத்தில் ஜி.டி.நாயுடுவாக நடிகர் மாதவன் நடிக்கிறார்.
தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் மாதவனை ஆக்ரோஷம் கொண்ட நடிகனாக தம்பி படத்தில் சீமான் உருமாற்றினார். 2022-ல் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட் என்ற பெயரில் நடிகர் மாதவனே இயக்கி நடித்தும் இருந்தார். இந்த படம் தேசிய விருதும் பெற்றது.
தற்போது மறைந்த கோவை விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் மாதவன் நடிக்கிறார். இப்படத்துக்கு GDN. என பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு கோவையில் தொடங்கி இருக்கிறது. இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.













