அரசியலுக்கு வருகிறாரா ஆர்.ஜே.பாலாஜி? வைரலாகும் புகைப்படம்

May 9, 2018, 11:50 AM IST

பிரபல ரேடியோ ஜாக்கி ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் வரப்போகவதாக சுவரில் எழுதிய வாசகத்துடன் வெளியான புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில், ரேடியோ ஜாக்கியில் முன்னணியில் இருந்து வருபவர் ஆர்.ஜே.பாலாஜி. இதை தவிர, படங்களிலும் நடித்து வருகிறார். ஐபிஎல் டி 20 போட்டிகளுக்கு கமென்ட்ரியாக உள்ளார். ஆர்.ஜே.பாலாஜியின் கலாய் பேச்சுக்காகவே ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
இந்நிலையில், ஆர்.ஜே.பாலாஜி குறித்த புகைப்படம் ஒன்று நேற்று முதல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இது, பாலாஜியின் அரசியல் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

அந்த சுவர் விளம்பரத்தில், இளைஞர்களை வழிநடத்த தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் காணும் ஆர்.ஜே.பாலாஜியை வரவேற்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 18ம் தேதி அண்ணனின் அறிவிப்பிற்காக காத்திருக்கும் என்று சிலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

ஆனால், இந்த விளம்பரம் எந்த பகுதியில் இருக்கிறது என்பது குறித்து தெரியவில்லை.
ஆர்.ஜே.பாலாஜி அரசியல் களம் இறங்குவதாகவும், அதற்கான முன்னோட்டம் தான் இந்த சுவர் விளம்பரம் இடம்பெற்றிருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன. இந்த புகைப்படம் இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading அரசியலுக்கு வருகிறாரா ஆர்.ஜே.பாலாஜி? வைரலாகும் புகைப்படம் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை