எனக்கு அரசியல் அறிவு இல்லை: விஜய் சேதுபதி ஓபன் டாக்

Jun 1, 2018, 09:32 AM IST

தமிழ்நாட்டின் நன்மைக்காக பொதுமக்கள் நடத்தும் பல்வேறு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முக்கிய நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

மக்கள் செல்வனின் பெயர்க்கு ஏற்றாற்போல் அவரின் குரல் மக்களுக்காக இருக்கும். இந்நிலையில் சமீபத்தில், நிருபர் ஒருவர் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று விஜய் சேதுபதியிடம் கேட்டார். அதற்கு விஜய் சேதுபதி, "நிச்சயம் நான் அரசியலுக்கு வரமாட்டேன். அரசியல் அறிவு எனக்கு இல்லை. அரசியலுக்கு வரும் சிந்தனை கூட என்னிடம் இல்லை" என்று வெளிப்படையாக கூறினார்.

மேலும், "ஆனால் மக்கள் மீது எனக்கு அக்கறை உள்ளது, அவர்களுக்கு நல்லது செய்ய யாராவது நல்ல நபர் அரசியலுக்கு வந்தால் என்னுடைய ஆதரவு இருக்கும். அரசியல் அறிவு, சிந்தனை இல்லாமல் அந்த இடத்திற்கு சென்று அமர ஆசைப்படக்கூடாது.

நமது இளைஞர்கள் இப்போது அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் நல்ல தெளிவோடு அரசியலை கவனிக்கிறார்கள். என்னை விட அரசியல் அறிவும் தெளிவும் நம் இளைஞர்களுக்கு உள்ளது. அவர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும்" என்று பதில் கூறியுள்ளார் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading எனக்கு அரசியல் அறிவு இல்லை: விஜய் சேதுபதி ஓபன் டாக் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை